காட்மியம் குளோரைடு
காட்மியம் குளோரைடு (Cadmium chloride) என்பது காட்மியம் மற்றும் குளோரின் என்ற இரு தனிமங்கள் இணைந்து CdCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உருவாகும் ஒரு வேதிச் சேர்மமாகும். நீரையுறிஞ்சும் தன்மை கொண்ட இத்திடப்பொருள் நீரில் நன்றாகவும் ஆல்ககாலில் சிறிதளவும் கரைகிறது. இச்சேர்மம் ஒரு அயனிச் சேர்மமாகக் கருதப்பட்டாலும் கணிசமான அளவுக்கு சகப் பிணைப்புப் பண்புகளையும் பெற்றுள்ளது. காட்மியம் குளோரைடின் படிகவமைப்பு இருபரிமாண அயனி அடுக்குகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பிற படிகவமைப்புகளை விளக்குவதற்கு ஏற்ற சரியான முன்மாதிரியாகவும் இது அமைகிறது. CdCl2.H2O மற்றும் CdCl2.5H2O என்ற இருவேறு படிகவமைப்புகளிலும் காட்மியம் குளோரைடு காணப்படுகிறது[2].
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
காட்மியம் டைகுளோரைடு
| |||
வேறு பெயர்கள்
காட்மியம்(II)குளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
10108-64-2 34330-64-8 (monohydrate) | |||
ChEBI | CHEBI:35456 | ||
ChemSpider | 23035 | ||
EC number | 233-296-7 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 24947 | ||
வே.ந.வி.ப எண் | EV0175000 | ||
| |||
UNII | J6K4F9V3BA | ||
UN number | 2570 | ||
பண்புகள் | |||
CdCl2 | |||
வாய்ப்பாட்டு எடை | 183.31 g·mol−1 | ||
தோற்றம் | வெண்மையான திடப்பொருள், நீருறிஞ்சி | ||
மணம் | மணமற்றது | ||
அடர்த்தி | 4.047 கி/செ.மீ3 (நீரிலி)[1] 3.327 கி/செ.மீ3 (ஐந்துநீரேற்று)[2] | ||
உருகுநிலை | 568 °C (1,054 °F; 841 K) at 760 mmHg[2] | ||
கொதிநிலை | 964 °C (1,767 °F; 1,237 K) at 760 mmHg[2] | ||
அரைஐந்துநீரேற்று: 79.5 கி/100 மி.லி (−10 °செ) 90 கி/100 மி.லி (0 °செ) ஒருநீரேற்று: 119.6 கி/100 மி.லி (25 °செ)[2] 134.3 கி/100 மி.லி (40 °செ) 134.2 கி/100 மி.லி (60 °செ) 147 கி/100 மி.லி (100 °செ)[3] | |||
கரைதிறன் | ஆல்ககால், செலினியம்(IV)ஆக்சிகுளோரைடு, பென்சோநைட்ரைல் ஆகியனவற்றில் கரையும். ஈதர், அசிட்டோன் ஆகியவற்றில் கரையாது.[1] | ||
பிரிடின்-இல் கரைதிறன் | 4.6 கி/கி.கி (0 °செ) 7.9 கி/கி.கி (4 °செ) 8.1 கி/கி.கி (15 °செ) 6.7 கி/கி.கி (30 °செ) 5 கி/கி.கி (100 °செ)[1] | ||
எத்தனால்-இல் கரைதிறன் | 1.3 கி/100 கி (10 °செ) 1.48 கி/100 கி (20 °செ) 1.91 கி/100 கி (40 °செ) 2.53 கி/100 கி (70 °செ)[1] | ||
இருமெத்தில் சல்பாக்சைடு-இல் கரைதிறன் | 18 கி/100 கி (25 °செ)[1] | ||
ஆவியமுக்கம் | 0.01 kPa (471 °செ) 0.1 kPa (541 °செ)[2] | ||
−6.87·10−5 செ.மீ3/mol[2] | |||
பிசுக்குமை | 2.31 cP (597 °செ) 1.87 cP (687 °செ)[1] | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | சாய்சதுரம், hR9 (நீரிலி)[4] ஒற்றைச்சரிவு (அரைஐந்துநீரேற்று)[3] | ||
புறவெளித் தொகுதி | R3m, No. 166 (நீரிலி)[4] | ||
Lattice constant | a = 3.846 Å, c = 17.479 Å (நீரிலி)[4] | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−391.5 கிஜூ/மோல்[2] | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
115.3 ஜூ/மோல்·K[2] | ||
வெப்பக் கொண்மை, C | 74.7 ஜூ/மோல்·K[2] | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
GHS pictograms | [5] | ||
GHS signal word | அபாயம் | ||
H301, H330, H340, H350, H360, H372, H410[5] | |||
P210, P260, P273, P284, P301+310, P310[5] | |||
ஈயூ வகைப்பாடு | T+ N Carc. Cat. 2 Muta. Cat. 2 Repr. Cat. 2 | ||
R-சொற்றொடர்கள் | R45, R46, R60, R61, R25, R26, R48/23/25, R50/53 | ||
S-சொற்றொடர்கள் | S53, S45, S60, S61 | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
94 mg/kg (rats, oral)[1] | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | காட்மியம் புளோரைடு காட்மியம் புரோமைடு காட்மியம் அயோடைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | துத்தநாகக் குளோரைடு பாதரச(II) குளோரைடு கால்சியம் குளோரைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அமைப்பு
தொகுசாய்சதுரம் சார்ந்த சீரொழுங்கில் காட்மியம் குளோரைடு படிகங்களாக உருவாகிறது. காட்மியம் அயோடைடும் இதே சீரொழுங்கில் அமையப்பெற்ற படிகங்களாக உருவாகும் சேர்மமாகும். இரு சேர்மங்களிலும் உள்ள தனி அடுக்குகள் ஒரேமாதிரியாக அமைந்துள்ளன. ஆனால காட்மியம் குளோரைடில் உள்ள குளோரைடு அயனிகள் நெருக்கப் பொதிவு சமகோள அணிக்கோவைகளைக் கொண்டுள்ளன. ஆனால் காட்மியம் அயோடைடில் அயோடின் அயனிகள் அறுகோண நெருக்கப் பொதிவு அணிக்கோவைகளக அடுக்கப்பட்டுள்ளன[6][7].
வேதிப்பண்புகள்
தொகுதண்ணீர் மற்றும் முனைவுக் கரைப்பான்களில் காட்மியம் குளோரைடு நன்றாகக் கரைகிறது. தண்ணீரில் அவ்வாறு அதிகமாகக் கரையும் போது அணைவு அயனியான [CdCl4]2 அயனியும் உருவாகிறது. இத்தகையப் பண்பினால் காட்மியம் குளோரைடு ஒரு {[லூயி அமிலம்|மென் லூயி அமிலமாக]] உள்ளது[6]
- CdCl2 + 2 Cl− → [CdCl4]2− .
பெரிய நேர்மின் அயனிகளுடன் எனில், முக்கோண இரட்டைப்பட்டைக்கூம்பு [CdCl5]3− அயனியாகத் தனித்துப்பிரிக்க இயல்கிறது.
தயாரிப்பு
தொகுநீரற்ற குளோரின் அல்லது ஐதரசன் குளோரைடு வாயுவை காட்மியம் உலோகத்துடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாக நீரற்ற காட்மியம் குளோரைடைத் தயாரிக்க முடியும்.
- Cd + 2 HCl → CdCl2 + H2
நீரேற்று காட்மியம் குளோரைடைத் தயாரிக்க காட்மியத்துடன் அல்லது காட்மியம் ஆக்சைடுடன் அல்லது காட்மியம் கார்பனேட்டுடன் ஐதரோ குளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கலாம்.
பயன்கள்
தொகுகாட்மியம் சல்பைடு என்ற காட்மியம் மஞ்சள் நிறமியைத் தயாரிக்கக் காட்மியம் குளோரைடு பயன்படுகிறது. இந்நிறமி ஓர் அற்புதமான மஞ்சள் நிறத்திலான நிலையான கனிம் வேதியியல் நிறமியாகும்.
- CdCl
2 + H
2S → CdS + 2 HCl
ஆய்வகங்களில் கரிமக் காட்மியச் சேர்மங்கள் தயாரிப்பில் நீரற்ற காட்மியம் குளோரைடு பயன்படுகிறது. இவ்வகைச் சேர்மங்கள் R2Cd என்ற பொதுவமைப்பில் சேர்மங்களை உருவாக்குகின்றன. இங்கு R என்பது ஓர் அரைல் அல்லது ஒரு முதன்மை ஆல்க்கைல் குழுவாக இருக்கும். இவை அசைல் குளோரைடுகளில் இருந்து கீட்டோன்களைத் தொகுப்பு முறையில் தயாரிக்க முன்னர் பயன்படுத்தப்பட்டன.:[8]
- CdCl
2 + 2 RMgX → R
2Cd + MgCl
2 + MgX
2
- R
2Cd + R'COCl → R'COR + CdCl
2
இத்தகைய செயலிகள் பின்னர் இவற்றைவிடக் குறைவான நச்சுத்தன்மை கொண்ட கரிமச்செப்பு சேர்மங்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டன. ஒளிநகல், சாயத்தொழில் மற்றும் மின்முலாம் பூச்சு போன்றவற்றுக்காகவும் காட்மியம் குளோரைடு பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Anatolievich, Kiper Ruslan. "cadmium chloride". http://chemister.ru. பார்க்கப்பட்ட நாள் 2014-06-25.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
- ↑ 3.0 3.1 Seidell, Atherton; Linke, William F. (1919). Solubilities of Inorganic and Organic Compounds (2nd ed.). New York: D. Van Nostrand Company. p. 169.
- ↑ 4.0 4.1 4.2 "Cadmium Chloride - CdCl2". http://wwwchem.uwimona.edu.jm. Mona, Jamaica: The University of the West Indies. பார்க்கப்பட்ட நாள் 2014-06-25.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ 5.0 5.1 5.2 Sigma-Aldrich Co., Cadmium chloride. Retrieved on 2014-05-23.
- ↑ 6.0 6.1 N. N. Greenwood, A. Earnshaw, Chemistry of the Elements, 2nd ed., Butterworth-Heinemann, Oxford, UK, 1997.
- ↑ A. F. Wells, Structural Inorganic Chemistry, 5th ed., Oxford University Press, Oxford, UK, 1984.
- ↑ J. March, Advanced Organic Chemistry, 4th ed., p. 723, Wiley, New York, 1992.
வெளி இணைப்புகள்
தொகு- International Chemical Safety Card 0116
- IARC Monograph "Cadmium and Cadmium Compounds" பரணிடப்பட்டது 2005-10-15 at the வந்தவழி இயந்திரம்
- National Pollutant Inventory - Cadmium and compounds பரணிடப்பட்டது 2006-12-10 at the வந்தவழி இயந்திரம்