காண்டா அருங்காட்சியகம்

இந்தியாவின் பஞ்சாபில் கட்டப்படும் சமூக அருங்காட்சியகம்

காண்டா அருங்காட்சியகம் (Khanda Museum) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதேகாட் சாகிப் மாவட்டத்தில் கட்டப்பட்டுவரும் ஓர் அருங்காட்சியகமாகும். சீக்கிய மதத்தின் அடையாளச் சின்னமாக கருதப்படும் இருபக்கக் கூர்வாளின் சிறப்பு வடிவமைப்பான காண்டா வடிவத்தில் இந்த அருங்காட்சியகம் கட்டப்படுகிறது.[1] இந்தியாவில் குருத்வாராக்களை மேலாண்மை செய்யும் சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு காண்டா அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பொறுப்பை ஏற்றுள்ளது. சீக்கியப் போராளி பந்தா சிங் பகதூரின் நினைவாக உருவாக்கப்படும் இந்த அருங்காட்சியம் அவரது வாழ்க்கை வரலாற்றையும் எடுத்துச் சொல்லும் விதமாக அமையும் என்று எதிர்நோக்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் பதேகாட் சாகிப்பில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

காண்டா அருங்காட்சியகம்
Khanda Museum
ਖੰਡਾ ਮਿਊਜ਼ੀਅਮ
Map
அமைவிடம்பதேகாட் சாகிப், பஞ்சாப், இந்தியா
ஆள்கூற்று30°39′04″N 76°23′37″E / 30.65103°N 76.39355°E / 30.65103; 76.39355
வகைசமூக அருங்காட்சியகம்
உரிமையாளர்சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு
வலைத்தளம்sgpc.net

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Museum to be set up in memory of Baba Banda Singh Bahadur". pressreader.com. Patiala: Hindustan Times. 15 May 2014. பார்க்கப்பட்ட நாள் 21 December 2019.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காண்டா_அருங்காட்சியகம்&oldid=3878674" இலிருந்து மீள்விக்கப்பட்டது