காத்துவாக்குல ரெண்டு காதல்
காத்துவாகுல ரெண்டு காதல் (Kaathuvaakula Rendu Kaadhal) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழிக் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் கீழ் எஸ். எஸ். லலித் குமார் தயாரித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோருடன் பிரபு, கலா, ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன் மற்றும் சிகான் உசேனி ஆகியோர் நடித்துள்ளனர். எப்போதும் துரதிர்ஷ்டம் தன்னைத் துரத்துவதாக நம்பி வாழும் ஒரு மனிதன் இரண்டு பெண்களைக் காதலிக்கும்போது தன்னை அதிர்ஷ்டம் துரத்துவதாக நம்புவதாக அமைந்துள்ளது இத்திரைப்படத்தின் கதை.
காத்துவாக்குல ரெண்டு காதல் | |
---|---|
![]() திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | விக்னேஷ் சிவன் |
தயாரிப்பு |
|
கதை | விக்னேஷ் சிவன் |
இசை | அனிருத் ரவிச்சந்திரன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | |
படத்தொகுப்பு | ஏ. ஸ்ரீகர் பிரசாத் |
கலையகம் |
|
விநியோகம் | ரெட் ஜெயன்ட் மூவீசு |
வெளியீடு | ஏப்ரல் 28, 2022 |
ஓட்டம் | 157 நிமிடங்கள்[1] |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹70 கோடி[2] |
இத்திரைப்படம் முதலில் 2016 இல் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், விக்னேஷ் மற்ற திட்டங்களில் பணியாற்றத் தொடங்கிய பிறகு அது நிறுத்தப்பட்டது. பிப்ரவரி 2020 இல், விக்னேஷ் படத்தை மீண்டும் அறிவித்தார். முதன்மை படப்பிடிப்பு 2020இல் டிசம்பரில் தொடங்கியது. இது சென்னை, ஹைதராபாத், புதுச்சேரி, மைசூர் உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டது. 2022 மார்ச் மாத இறுதியில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், விஜய் கார்த்திக் கண்ணனுடன் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இத்திரைப்படம் 28 ஏப்ரல் 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முக்கிய நடிகர்களின் நடிப்பு, ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசை விமர்சனங்களில் பாராட்டைப் பெற்றது. ஆனால், மிகப்பழமையான திரைக்கதை, நீளம் மற்றும் படத்தின் இறுதிக்காட்சி ஆகியவை விமர்சிக்கப்பட்டது. இருந்தபோதிலும், படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது, ரூ.70 கோடிக்கும் (US$ 8.8 மில்லியனிற்கும்) மேல் வசூலித்தது.
கதைக்களம்
தொகுராம்போ என்று அழைக்கப்படும் ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஓஹோந்திரன் குடும்பத்தில் திருமணம் செய்துகொள்பவர் இறந்துவிடுவார் என்று சாபத்திற்கு ஆளான ஒரு குடும்பத்தில் பிறந்துள்ளார். ராம்போவின் தந்தை, சாபத்தை உடைக்கும் உறுதியுடன், அவரது சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் திருமணமாகாத நிலையில் மினா கைஃப் என்ற உள்ளூர் ஆசிரியரை ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார். இருப்பினும், ராம்போவின் தந்தை தனது மகன் பிறந்ததைத் தற்செயலாக ஒரு கோபுரத்திலிருந்து அறிவிக்கும் போது தவறி விழுந்துவிடுகிறார். சாபம் தாக்குகிறது. சிறிது நேரத்திலேயே மினா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடங்கிவிடுகிறாள் .
ராம்போவின் மாமாக்கள், அத்தைகள் மற்றும் ஒட்டுமொத்தக் கிராமமும் ராம்போவின் தந்தை கடுமையாகப் போராட முயன்றதற்கு மாறாக ராம்போ துரதிர்ஷ்டத்துடன் பிறந்துள்ளதாக நம்பினர். இராம்போ தான் எங்கு சென்றாலும் அங்கு துரதிருஷ்டம் வருவதாக நம்பி வளர்கிறார். அவரது தாயார் அவர் முன்னிலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்படும்போது, தான் அருகிலிருப்பதால்தான் தாயாருக்கு நோய் ஏற்பட்டது என்று நம்பி, கிராமத்தை விட்டு என்றென்றைக்குமாக ஓடிவிடுகிறார்.
ராம்போ தன் வாழ்க்கையை நடத்துவதற்கான பணம் சம்பாதிப்பதற்காக இரண்டு வேலைகளைச் செய்கிறார். பகலில் அழைப்பின்பேரில் மகிழ்வுந்து ஓட்டுநராகப் பணிபுரிகிறார். இரவில், ராம்போ பொது விடுதி ஒன்றில் பாதுகாப்பாளராக வேலை செய்கிறார். இவர் கதீஜா பேகத்தை விடுதியொன்றில் சந்திக்கிறார், இருவரும் நட்பை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு நாள், ராம்போ கதீஜாவின் முரட்டுக் காதலன் முகமது மோபியுடன் இருக்கும் போது சந்திக்கிறார். ஒரு சூழலில் முகமது மோபி ராம்போவை அறைந்த பிறகு எதிர்கொள்கிறான். கதீஜா முகமதுவிடமிருந்து பிரிந்து ராம்போவுடன் அதிக நேரம் செலவிடத் தொடங்குகிறார்.
ராம்போ தனது வாடகை வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, கண்மணி கங்குலி என்ற விற்பனைப் பெண்ணைச் சந்திக்கிறார், அவர் தனது தங்கை மின்மினி மற்றும் அவரது மாற்றுத் திறனாளி சகோதரர் பார்கவ் ஆகியோரை வளர்க்கிறார். திருமணத்திற்குப் பிறகு தன் உடன்பிறந்தவர்களை தன்னுடன் வாழ அனுமதிக்கும் கணவனைக் கண்டுபிடிக்க கண்மணி முயற்சி செய்கிறாள், ஆனால் பலனில்லை. கதீஜா மற்றும் கண்மணி இருவரும் ராம்போவின் மீது காதலை வளர்த்துக் கொள்கிறார்கள், அதை ராம்போ பரிமாறிக்கொள்கிறார், மேலும் இரு பெண்களும் அவருக்கு ஒரே நாளில் தங்கள் காதலைச் சொல்கிறார்கள். இரண்டு பெண்கள் தன்னிடம் காதல் வயப்பட்டதைக் கண்டு ராம்போ ஆச்சரியப்பட்டாலும், அவர்களின் காதல் மட்டுமே தனது துரதிர்ஷ்டத்தை நல்லதாக மாற்றியதாக நம்புகிறார். எனவே அவர் இருவரின் காதலையும் ஏற்றுக்கொள்கிறார்.
தனது இரட்டைக் காதல் வாழ்க்கையை எப்படித் தொடர்வது என்று தெரியாமல், உண்மை நிலை நிகழ்ச்சியில் தொகுப்பாளரான பிரபுவின் உதவியை வேண்டுகிறார், இவர் ராம்போவுக்கு நினைவாற்றல் குறைபாடு இருப்பதாக ஒரு கதையை உருவாக்குகிறார், அது அவருக்கு இரவும் பகலும் நடக்கும் நிகழ்வுகளை மாறி மாறி மறக்க வைக்கிறது. தனக்கு இரு பெண்களின் நினைவுகள் இருப்பதாகவும், இருவரையும் சமமாகக் காதலிப்பதாகவும் ராம்போ வெளிப்படுத்தும் போது அந்த சூழ்ச்சி முறிந்து விடுகிறது; மற்றவருக்காக தங்கள் அன்பைத் தியாகம் செய்வது அந்த இரண்டு பெண்களின் கைகளில் உள்ளது. கண்மணி மற்றும் கதீஜா இருவரும் அதைச் செய்ய மறுத்து, ராம்போவைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக நிற்கிறார்கள். மூவரும் ஒன்றாகச் செல்கிறார்கள், இரு பெண்களும் முதலில் ஒருவரையொருவர் விரும்பவில்லை என்றாலும், கதீஜாவின் தந்தையின் எதிர்பாராத மரணத்திற்குப் பிறகு, அவர்கள் தங்களுக்குள் நட்பை வளர்த்துக் கொள்கிறார்கள். அந்த உண்மை நிலை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டதை ராம்போவின் நண்பர் ஒருவரிடமிருந்து தெரிந்துகொண்டு அவரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள் இரண்டு பெண்களும்.
தீவிர நோய்வாய்ப்பட்ட ராம்போவின் தாயைப் பார்க்க கடைசியாக கிராமத்திற்குச் செல்லும்படி ராம்போவின் நண்பர் கேட்டுக்கொள்கிறார். ராம்போ தனது துரதிர்ஷ்டத்தை நினைத்து அங்கு திரும்பிச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்கிறான். ஆனால், அவர் தன் தாயைப் பார்க்கச்செல்ல வேண்டிய கட்டாயத்தில், அவரது தாயார் மிக விரைவாக குணமடைகிறார். ராம்போவின் இருப்பு இப்போது நல்லதிர்ஷ்டத்தைத் தருகிறது என்று கிராமத்தினர் நம்புகின்றனர். கிராமத்தினர் கதீஜா மற்றும் கண்மணி இருவரையும் ராம்போவை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சுகிறார்கள், அதனால் குடும்பத்தின் சாபம் உடைந்து அவரது அத்தைகள் மற்றும் மாமாக்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்ளும் நிலை உருவாகும் என்றும் கூறுகிறார்கள். இரண்டு பெண்களும் இறுதியில் சம்மதித்து, ராம்போவுக்கு மட்டுமல்ல, அவரது முழு குடும்பத்திற்கும் திருமண விழாவை நடத்துகிறார்கள்.
குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு, கதீஜாவும் கண்மணியும் ஒவ்வொருவரும் தங்கள் அன்பைத் தியாகம் செய்து மற்றவர் ராம்போவை திருமணம் செய்துகொள்ள ஏதுவாக திருமணத்திலிருந்து வெளியேறுகிறார்கள். ராம்போவிடமிருந்து இருவரும் பிரிந்து விடுவதால் திருமணம் நடைபெறாமல் போகிறது. ஒரு வருடம் கழித்து, மூவரும் மீண்டும் சந்திக்கிறார்கள், சாபத்தை உடைக்கத் திருமண உறவு தேவையில்லை என்றும் தற்போதிருப்பது போன்ற நட்ப போதுமானது என்றும் ராம்போ கூறுகிறார். இரண்டு பெண்களும் ராம்போவின் வாழ்விலிருந்து வெளியேறிய பிறகு, கத்ரீனா கைஃப் தனது புதிய காதலியாக ராம்போவுடன் அரட்டை அடிக்கத் தொடங்கியுள்ளார் என்று கூறி ராம்போ தனது பக்கத்து வீட்டுக்காரருக்கு அதிர்ச்சியளிக்கிறார். ராம்போ தனது மொபைலைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறுகிறார், இதை அறியாத கத்ரீனா இணையத்தில் அவருக்காகக் காத்திருப்பதாக திரைப்படம் முடிகிறது.
நடிப்பு
தொகு- ராம்போவாக விஜய் சேதுபதி
- இளவயது ராம்போவாக கமலேஷ்
- கண்மணி கங்கூலியாக நயன்தாரா
- கதீஜா பேகமாக சமந்தா ருத் பிரபு
- நடிகர் பிரபுவாகவே பிரபு
- இதய கலாவாக கலா மாஸ்டர்
- கண்மணியின் சகோதரி மின்மினி கங்கூலியாக தீபிகா கோத்தாரி
- கண்மணியின் தம்பியாக மாஸ்டர் பார்கவ் சுந்தர்
- முகமது மோபியாக சிறிசாந்த்
- ராம்போவின் தாய் மினா கைஃபாக சீமா
- இளவயது மினா கைஃபாக திவ்யா பிள்ளை
- அர்னால்டாக ரெடின் கிங்ஸ்லி
- ராம்போவின் நண்பன் மாறனாக மாறன்
- குடிகார வாடகை வீட்டுக்காரராக திலீப் சுப்பராயன்
- ராம்போவின் பக்கத்து வீட்டுக்காரராக சிகான் உசேனி
- ராம்போவின் போலியான தந்தையாக சித்ரா லட்சுமணன்
- கதீஜாவின் தந்தையாக இரவிகாந்த்
- போலியான உளவியல் மருத்துவராக ரவி ராகவேந்திரா
- சாக்கோபார் விற்பவராக பிஜ்லி ரமேஷ்
- கதீஜாவின் நண்பராக தேஜு அஸ்வினி
- ராம்போவின் தந்தையாக லிங்கேசன்
- கதீஜாவின் அம்மாவாக லதா
2016 ஆம் ஆண்டில், விக்னேஷ் சிவன் தனது அடுத்த படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவித்தார். நானும் ரவுடி தான் (2015) இற்குப் பிறகு இது அவர்களின் இரண்டாவது கூட்டு முயற்சிகயாகும். ஏ.எம்.ரத்னத்தால் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 2016 இல் தயாரிப்பிற்கு செல்லவிருந்தது, பிப்ரவரி 14, 2020 அன்று, விக்னேஷ், சேதுபதியுடன் இன்னும் இணைந்திருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை அதிகாரப்பூர்வமாக மீண்டும் அறிவித்தார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் லலித் குமாருடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தனது சொந்த பேனரில் இப்படத்தை தயாரித்தார். விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் எஸ்.. ஆர் கதிர் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். [3] இந்தத் திரைப்படம் ஸ்வேதா சாபு சிரிலின் (கலை இயக்குனர் சாபு சிரிலின் மகள்) அறிமுகமாகும், இவர் படத்தின் குழுவில் தயாரிப்பு வடிவமைப்பாளராக இணைந்தார்.
வெளியீடு
தொகுதிரையரங்க வெளியீடு
தொகுகாத்துவாக்குல ரெண்டு காதல் 28 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது. [4] இது முதலில் டிசம்பர் 2021 இல் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் COVID-19 தொற்றுநோய் காரணமாக, வெளியீடு தாமதமானது. [5] இப்படம் பின்னர் தெலுங்கில் கண்மணி ராம்போ கதிஜா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. [6]
விநியோகம்
தொகுஇப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிசு நிறுவனம் வாங்கியுள்ளது. [7] அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் இத்திரைப்படம் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் விநியோகிக்கப்பட்டது. [8]
வீட்டு ஊடகம்
தொகுஇத்திரைப்படம் 27 மே 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியீடு செய்யப்பட்டது. [9]
வரவேற்பு
தொகுவசூல் ரீதியான நிலை
தொகுஇத்திரைப்படம் ₹70 கோடி (US$8.8 மில்லியன்) மேல் வசூலித்தது. உலகளாவிய வசூல் நிலவரத்தில், அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக மாறியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kaathuvaakula Rendu Kaadhal". British Board of Film Classification (in ஆங்கிலம்). Archived from the original on 19 December 2024. Retrieved 19 December 2024.
- ↑ "'Kaathuvaakula Rendu Kaadhal' lifetime BO collection: Vijay Sethupathi, Nayanthara and Samantha starrer collects Rs. 70 crore globally". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 May 2022. Archived from the original on 30 May 2022. Retrieved 30 May 2022.
- ↑ "Kaathu Vaakula Rendu Kaadhal release pushed!". சிஃபி. 8 December 2021. Archived from the original on 15 December 2021. Retrieved 19 December 2021.
- ↑ "Watch: Kaathuvaakula Rendu Kaadhal teaser promises fun romcom, release date announced". தி நியூஸ் மினிட். 11 February 2022. Archived from the original on 11 February 2022. Retrieved 11 February 2022.
- ↑ K, Janani (2 February 2022). "Kaathuvaakula Rendu Kaadhal teaser to release on February 11, film to hit theatres in April". இந்தியா டுடே. Archived from the original on 3 February 2022. Retrieved 17 February 2022.
- ↑ "Samantha Or Nayanthara: సమంత, నయనతారలో విజయ్ సేతుపతి ఎవరికి ఓటేశాడు?". ABP Desam (in தெலுங்கு). 12 February 2022. Archived from the original on 24 November 2023. Retrieved 13 April 2022.
- ↑ "'Kaathuvaakula Rendu Kaadhal' to have a grand release on April 28". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 February 2022 இம் மூலத்தில் இருந்து 20 January 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20250120145736/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kaathuvaakula-rendu-kaadhal-to-have-a-grand-release-on-april-28/articleshow/89748892.cms.
- ↑ Menon, Thinkal (11 May 2022). "Here's where Kaathuvaakula Rendu Kaadhal has emerged as Vijay Sethupathi's highest grosser". OTTPlay (in ஆங்கிலம்). Archived from the original on 6 March 2023. Retrieved 14 March 2023.
- ↑ sri50 (18 May 2022). "#KaathuvaakulaRenduKaadhal alias #KanmaniPlusKhatija will start streaming on #DisneyPlusHotstar from May 27!..." (Tweet). Archived from the original on 24 December 2024. Retrieved 23 May 2022.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)