காந்தக் கலப்புலோகம்

காந்தக் கலப்புலோகம் ( Magnetic alloy) என்பது தனிம வரிசை அட்டவணையில் உள்ள பல்வேறு உலோகங்கங்கள் ஒன்றாக இணைந்து உருவாகும் ஓர் உலோகக் கலவை ஆகும். இந்தக் கலவையில் காந்தத் தன்மையுள்ள முக்கியத் தனிமங்களான இரும்பு கோபால்ட் நிக்கல் ஆகியவற்றில் ஒன்று கண்டிப்பாக கலந்து இருக்கவேண்டும். காந்தத் தன்மையுள்ள தனிமம் ஒன்றுதான் இருக்கவேண்டும் என்று நிபந்தனை ஏதும் இல்லை, ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்களும் அக்கலவையில் கலந்து இருக்கலாம். காந்தக் கலப்புலோகங்கள் தற்பொழுது பொதுவான தனிமங்களாக மாறிவிட்டன. அதிலும் குறிப்பாக இரும்பும் கார்பனும் சேர்ந்து உருவாகும் எஃகு, இரும்பு, கோபாட், நிக்கல் அலுமினியம் ஆகியவை சேர்ந்து உருவாகும் அல்நிக்கோ, இரும்பும் நிக்கலும் சேர்ந்து உருவாகும் பெர்ம் கலப்புலோகம் ஆகிய உலோகக் கலவைகளில் காந்தத் தன்மை உலோகங்கள் பொதுவாக கலந்துள்ளன. வலிமையான காந்தத் தனிமம் இரும்பு ஆகும். மேலே குறிப்பிடப்பட்ட கலப்புலோகங்களால் ஆக்கப்படாத உலோகக் கலவைகளையும் காந்தங்கள் ஈர்க்க இரும்பு உதவுகிறது [1][2].

மேற்கோள்கள் தொகு

  1. "Cobalt Facts" (PDF). Cobalt Development Institute. 2006. pp. 23–28. Archived from the original (PDF) on 1 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 3 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Kondo, Jun (July 1964). "Resistance Minimum in Dilute Magnetic Alloys". Progress of Theoretical Physics 32 (01): 37-49. doi:10.1143/PTP.32.37. http://ptp.oxfordjournals.org/content/32/1/37.full.pdf. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தக்_கலப்புலோகம்&oldid=3928774" இலிருந்து மீள்விக்கப்பட்டது