களவு மணம்
(காந்தர்வ விவாகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
களவு மணம் அல்லது காந்தருவ மணம் இந்து சமய அற நூல்களில் கூறப்பட்டுள்ள எண் வகை மணங்களுள் ஒன்று. காந்தருவ மணம் என்பது கருத்தொருமித்த ஆடவனும் பெண்ணும் தம்முள் இயைந்து கூடும் கூட்டமாகும். இவ்வகை மணம் பெரும்பாலும் களவொழுக்கமாகவே இருக்கும். பிரமம், தைவம், ஆருசம், பிராசாபத்தியம், ஆகரம், காந்தருவம், இராக்கதம், பைசாசம் ஆகிய எண் வகை விவாகங்களுள் முதலிற் கூறப்பட்ட பிரமம், தைவம், ஆருசம், பிராசாபத்தியம் என்னும் நான்கும் மேலானவை என்றும் ஆசுரம், காந்தருவம், இராக்கதம், பைசாசம் என்னும் நான்கும் கீழானவை என்றும் பொதுவாகப் பாகுபடுத்தப்படும்.
காந்தருவ விவாகத்திற்கு எடுத்துக்காட்டாக துஷ்யந்தன், சகுந்தலை திருமணத்தை குறிப்பிடலாம். இவர்கள் மணம் புரியும் போது துஷ்யந்தன் தன கணையாழியை அணிவித்தான்.