காபீன்

கரி

வேதியியலில், காபீன் அல்லது கார்பீன் (Carbene) என்பதன் பொது வாய்பாடு R-(C:)-R' அல்லது R=C: ஆகும்.மையக் கரி அணு இரண்டே தொகுதிகளுடன் சகபிணைப்பினால் இணைந்தும் மற்ற எலெக்ட்ரான்கள் பிணைப்பில்லாமலும் நடுநிலையாக இருந்தால் இவ்வமைப்புகள் கார்பீன்கள் (carbenes) எனப்படும. இவ்வமைப்புகளின் மூலப் பொருள் CH2 (மெத்திலீன்) எனப்படும். ஆனால், இதன் வழிப்பொருள்கள் (derivatives) கார்பீன்கள் என அழைக்கப்படுகின்றன[1][2]. எடுத்துக்காட்டாக ČсI2 டை குளோரோ கார்பீன் என அழைக்கப்படுகிறது. கார்பீன்கள் பொதுவாக இருவழிகளில் உருவாகின்றன. நீக்கல் வினைகளில் ஒரு கரி அணு தொகுதியை எலெக்ட்ரான் இல்லாமலும் (புரோட்டான்), மற்றொரு தொகுதியை எலெக்ட்ரான்களுடனும் (ஹாலைடு அயனி) இழப்பதனால் கார்பீன் உருவாகலாம்.

மெத்திலீன், ஓர் எளிய காபீன்.

சிலவகையான இரட்டைப் பிணைப்புள்ள சேர்மங்கள் பிளப்பதால் கார்பீன்கள் உருவாகலாம். கார்பீன்கள் மிக அதிக வினைபுரியும் தன்மை கொண்டவையாதலால் இம்மாதிரியான வினைகள் இருப்பதன் உண்மையை அறிதல் மிகக் கடினமாக உள்ளது.

இரண்டு பிணைப்பில் ஈடுபடாத வலுவளவு எதிர்மின்னிகளையும் இரு வலுவளவையும் உடைய நடுநிலையான கரிம அணுவைக் கொண்ட மூலக்கூறு ஆகும்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காபீன்&oldid=3351704" இருந்து மீள்விக்கப்பட்டது