காமநாயக்கன் பாளையம் பேரூராட்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காமநாயக்கன் பாளையம், தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 17 பேரூராட்சிகளில் இதுவும் ஒரு பேரூராட்சி ஆகும். 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24-ம் தேதி பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டது [சான்று தேவை]. இப்பேரூராட்சி கோவை மாவட்டத்திற்கும் , திருப்பூர் மாவட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் அமைந்துள்ளன. காமநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் பீஹார், உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஒரிசா என வடமாநிலத்தைச் சார்ந்தோர் கிட்டத்தட்ட 5000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். காமநாயக்கன் பாளையத்தைச் சுற்றி 15 மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சூலூர் தொகுதியில் 36,000 வாக்கு வித்தியாசத்தில் வென்ற அதிமுக எம்.எல்.ஏ திரு கனகராஜின் சொந்த ஊரும் காமநாயக்கன் பாளையம் ஆகும். இந்தப் பகுதியின் முதல் முதலாக மீன் விற்பனை 2001 - ம் ஆண்டு தம்பி மீன் கடல் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து மீன் விற்பனை காமநாயக்கன் பாளையம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காமநாயக்கன் பாளையம் | |
— மூன்றாம் நிலை பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
வட்டம் | பல்லடம் வட்டம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
12,378 (2011[update]) • 1,266/km2 (3,279/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 9.78 சதுர கிலோமீட்டர்கள் (3.78 sq mi) |
பெயர்க்காரணம்தொகு
காமம் என்பது மோகம் என்று பொருள் படும். மோகம் என்பதற்கு ஆசை என கூறுவர். விஜய நகர ஆட்சியில் பாளையக்காரரர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டியும், பெரும் நாயக்கர் இங்கு குடி கொண்டு இருந்ததால் காம-வீரிய-நாயக்கன்-பாளையம் எனப் பெயர் பெற்றது. பின், காலப்போக்கில் பெயர் மறுவுதலின் காரணமாக இவ்வூர் காம நாயகன் பாளையம் எனப் பெயர் பெற்றது. இருப்பினும் இவ்வூரின் முழுப் பெயர், 'காம வீரிய நாயகன் பாளையம்' ஆகும்.[சான்று தேவை]
காமநாயக்கன் பாளையம் சந்திப்புதொகு
காமநாயக்கன் பாளையம் சந்திப்பு என்பது நான்கு சாலைகளின் சந்திப்பு ஆகும். இவ்வூர் வழியாகத் தான் பொள்ளாச்சி, கேரள மாநில வாகனங்கள் செல்ல சாலை அமைந்துள்ளது. இதனால் இது, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் மிக முக்கியமான சாலை ஆகும். காமநாயக்கன் பாளையம் முதல் பல்லடம் வழியாக அவினாசி செல்ல ஒரு ரோடும், காமநாயக்கன் பாளையம் முதல் பொள்ளாச்சி செல்ல ஒரு ரோடும், காமநாயக்கன் பாளையம் முதல் அன்னூர் செல்ல ஒரு ரோடும், காமநாயக்கன் பாளையம் முதல் வாவி பாளையம் வழியாக உடுமலைப்பேட்டை செல்ல ஒரு சாலை என நான்கு மிக முக்கியமான சாலைகள் உள்ளன. இதனாலையே நால்ரோட்டில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அவற்றை எல்லாம் கடந்து நூற்றாண்டு காணும் நகரமாக தற்போது உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்புக்கள்தொகு
காமநாயக்கன் பாளையம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் இப்பகுதியில் சிறப்பு பெற்றது. மேலும் மாரியம்மன், வடுக பாளையம் மாகாளியம்மன் கோவில்களும் சிறப்பு பெற்றவை.
- இவ்வூரில் கிட்டத்தட்ட 98 ஆண்டுகள் (சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக) இருக்கும் வாரச்சந்தை மிகவும் சிறப்பு.
- காமநாயக்கன் பாளையம் காவல் நிலையமானது, ஆங்கிலேய ஆட்சியில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.
காவல் நிலையம்தொகு
காமநாயக்கன் பாளையம் காவல் நிலையம் ஆங்கிலேய அட்சி காலத்தில் ராணி எலிசபெத் மஹாராணியால், திறந்து வைக்கப்பட்டது. இந்த காவல் நிலையம் 15.05.1926 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. தற்பொழுது 93 வருடங்கள் ஆகின்றன. தமிழக காவல்துறை வரலாற்றிலேயே மிகப்பழமையான காவல் நிலையம், காமநாயக்கன் பாளையம் காவல் நிலையம் ஆகும்.
வசதிகள்தொகு
இவ்வூருக்கு
- வாரச்சந்தை,
- சாரதா திரையரங்கு, இந்த திரையங்கில் ஆன்லைன் புக்கிங் செய்ய www.justtickets.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம்
- எச்சரிக்கை விளக்கு,
- கடை வீதி,
- பல்பொருள் அங்காடி,
- வங்கிகள்,
- பழைய நூலகம்,
- புதிய நூலகம் ஆகிய வசதிகளும் உள்ளன. இவ்வூரில் உள்ள வாரச்சந்தை 98 வருட மிகவும் பழமையான வாரச்சந்தை ஆகும். இந்த வாரச்சந்தை ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[3]
அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
---|---|
குடிநீர் இணைப்புகள் | 2305 |
சிறு மின்விசைக் குழாய்கள் | 15 |
கைக்குழாய்கள் | 42 |
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 15 |
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | 8 |
உள்ளாட்சிக் கட்டடங்கள் | 6 |
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | 4 |
ஊரணிகள் அல்லது குளங்கள் | 5 |
விளையாட்டு மையங்கள் | அம்மா பூங்கா 1 |
சந்தைகள் | 1 |
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 32 |
ஊராட்சிச் சாலைகள் | 15 |
பேருந்து நிலையங்கள் | காமநாயக்கன் பாளையத்தில் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை |
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 2 |
பேரூராட்சி அமைப்புதொகு
பரப்பளவு | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
9.88 ச. கிமீ | |||||||||||
மக்கள் தொகை | |||||||||||
2011 கணக்கெடுப்பின்படி | 12,378 | பேரூராட்சி வார்டுகள் | 15 | ||||||||
இம்மன்றத்திற்காக அமைக்கபெற்ற நிலைக்குழுக்கள் | |||||||||||
வரி மற்றும் நிதிக் குழு | |||||||||||
திட்டக் குழு | |||||||||||
நல்வாழ்வுக் குழு | கணக்கிடுதல் குழு |
பேரூராட்சியானது 83 தெருக்களையும் 15 மாமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்கள் பேரூராட்சியின் நிர்வாக தலைமையிடமான பல்லடம் ஒன்றிய சபைக்கு அனுப்பப்படுகின்றனர். மேலும் பேரூராட்சி 12,000-ற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.[சான்று தேவை]
மக்கள் தொகைதொகு
2001 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இவ்வூரில் 12,378 பேர் வசிக்கின்றனர். இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் வசிக்கின்றனர்.மேலும் பேரூராட்சி எல்லைக்குள் மட்டும் 8,453 பேர் வசிக்கின்றனர்.
போக்குவரத்துதொகு
இவ்வூரிலிருந்து 28 கி.மீ. இல் திருப்பூரில் தொடர்வண்டி நிலையமும், 38 கி.மீ. தொலைவில் கோவை சர்வதேச விமான நிலையம் உள்ளது. மேலும் காமநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் இருந்து பொள்ளாச்சி, திருச்சூர், குருவாயூர், பல்லடம், திருப்பூர், கோபிச்செட்டி பாளையம், குன்னூர், கோயம்புத்தூர், பெங்களூர், தர்மபுரி, ஒசூர், உடுமலை, ஈரோடு, சேலம், நகரப் பேருந்துகள் என அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதிகள் உள்ளன. திருப்பூர்-பொள்ளாச்சி வழிதடத்தில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை என பேருந்து போக்குவரத்து உள்ளது. சிறப்பு தினங்களில் பழநி, ஆனைமலை,திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் உள்ளன.
அரசியல்தொகு
இவ்வூர் இரு மாவட்ட இடையில் உள்ளதால் 50% பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கும் 50% சூலூர் சட்டமன்ற தொகுதிக்கும் மக்கள் வாக்களிக்கின்றனர்.
வங்கிகள்தொகு
- ஐசிஐசிஐ வங்கி
- ஸ்டேட் பாங்கு ஆப் இந்தியா
- பாங்கு ஆப் பரோடா
- வடுகபாளையம் தொடக்க வேளாண்மை மற்றும் கூட்டுறவு வங்கி
தானியிக்க வங்கி இயந்திரம் (ATM)தொகு
- ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்
- கரூர் வைஸ்யா வங்கி ஏடிஎம்
- ஹெச்டியை வங்கி ஏடிஎம்
- ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்
அடங்கியுள்ள பகுதிகள்தொகு
- காமநாயக்கன் பாளையம் வடக்கு
- காமநாயக்கன் பாளையம் தெற்கு
- காமநாயக்கன் பாளையம் மேற்கு
- வடுக பாளையம்
- காந்தி நகர்
- நல்லிக்கவுண்டன் பாளையம்
- எம். ஜி.ஆர் நகர்
- சௌண்டேஸ்வரி நகர்
- கணபதி நகர்
- வி.மேட்டூர்
- கிருஷ்ணாபுரம்
- கந்தம் பாளையம்
- மூகாம்பிகை நகர்
- சக்தி நகர்
- மத்தநாயக்கன் பாளையம்
- செங்கோடம் பாளையம்
- திருமாண்ட கவுண்டன் பாளையம்
- ஊத்துக்குளி
- ஆதி திராவிடர் காலணி
- புளியம்பட்டி
- சின்ன வதம்பச்சேரி
- பெரிய வதம்பச்சேரி
- ஓடக்கல் பாளையம்
- நல்லூர் பாளையம்
- கவுண்டம் பாளையம்
- செங்கோடம் பாளையம்
- மின்சார வாரிய வீதி
ஆகிய பகுதிகள் பேரூராட்சி பகுதியில் உள்ளடக்கி உள்ளது.
கல்வி நிறுவனங்கள்தொகு
- கொங்குராஜா தொடக்கப்பள்ளி
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- அரசு உயர்நிலை பள்ளி
- அங்கன்வாடி மையங்கள் இரண்டு
- கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- ஸ்கேட் தொழில்நுட்ப கல்லூரி
மேலும் காண்கதொகு
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழக பேரூராட்சிகள்
- திருப்பூர் மாவட்டம்
- பல்லடம் ஊராட்சி ஒன்றியம்
- திருப்பூர் மாவட்ட காவல்துறை
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;panchayat
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை