காமநாயக்கன் பாளையம் ஊராட்சி
காமநாயக்கன் பாளையம் ஊராட்சி (ஆங்கிலம் : Kamanaickenpalayam - 641658) என்பது தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் வட்டத்தில் வதம்பச்சேரி ஊராட்சியில் உள்ள துணை நிலை ஊராட்சி ஆகும். ஆகும். கருணாநிதி ஆட்சியில் 2007ம் ஆண்டு ஊராட்சி ஒன்றியமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.[சான்று தேவை]மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் வதம்பச்சேரி ஊராட்சியில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.[சான்று தேவை] இந்த ஊராட்சி ஒன்றியமானது பல்லடம் சட்டமன்றம் மற்றும் சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த வதம்பச்சேரி - கே. கிருஷ்ணாபுரம் ஊராட்சிகளுக்கு காமநாயக்கன் பாளையத்தில் இருந்து மட்டும் 9 உறுப்பினர்கள் ஊராட்சி சபைக்கு தேர்ந்தெடுக்கின்றனர்.
காமநாயக்கன் பாளையம் | |
— வருவாய் கிராமம் (641658) — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர், கோயம்புத்தூர் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
ஊராட்சித் தலைவர் | க. ராசாமணி (அதிமுக) |
மக்களவைத் தொகுதி | கோயம்புத்தூர் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | சூலூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 8,453 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
வரலாறுதொகு
கொங்கு நாட்டில் அமைந்துள்ள இவ்வூர் நூற்றாண்டு கண்ட பழமை வாய்ந்த ஊராகும். விஜய நகர ஆட்சியில் சில பகுதிகளில் நாயக்கர்கள் அரசப் பிரதிநியாக நியமிக்கப்பட்டனர். பல பகுதிகளில் நாயக்கர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தனர். அவற்றுள் இவ்வூரும் ஒன்று.
காமநாயக்கன் பாளையம் சந்திப்புதொகு
காமநாயக்கன் பாளையம் சந்திப்பு என்பது நான்கு சாலைகளின் சந்திப்பு ஆகும். இவ்வூர் வழியாகத் தான் பொள்ளாச்சி, கேரள மாநில வாகனங்கள் செல்ல சாலை அமைந்துள்ளது. இதனால் இது, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் மிக முக்கியமான சாலை ஆகும். காமநாயக்கன் பாளையம் முதல் பல்லடம் வழியாக அவினாசி செல்ல ஒரு ரோடும், காமநாயக்கன் பாளையம் முதல் பொள்ளாச்சி செல்ல ஒரு ரோடும், காமநாயக்கன் பாளையம் முதல் அன்னூர் செல்ல ஒரு ரோடும், காமநாயக்கன் பாளையம் முதல் வாவிபாளையம் வழியாக உடுமலைப்பேட்டை செல்ல ஒரு சாலை என நான்கு மிக முக்கியமான சாலைகள் உள்ளன. இதனாலையே நால்ரோட்டில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அவற்றை எல்லாம் கடந்து நூற்றாண் காணும் ஊராக குறிப்பிடத்தக்கது.
சிறப்புகள்தொகு
காமநாயக்கன் பாளையம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் இப்பகுதியில் சிறப்பு பெற்றது. மேலும் மாரியம்மன், வடுக பாளையம் மாகாளியம்மன் கோவில்களும் சிறப்பு பெற்றவை.
- இவ்வூரில் கிட்டத்தட்ட 98 ஆண்டுகள் (சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக) இருக்கும் வாரச்சந்தை மிகவும் சிறப்பு.
- காமநாயக்கன் பாளையம் காவல் நிலையமானது, ஆங்கிலேய ஆட்சியில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.
வசதிகள்தொகு
இவ்வூருக்கு
- வாரச்சந்தை,
- சாரதா திரையரங்கு,
- எச்சரிக்கை விளக்கு,
- கடை வீதி,
- பல்பொருள் அங்காடி,
- வங்கிகள்,
- பழைய நூலகம்,
- புதிய நூலகம் ஆகிய வசதிகளும் உள்ளன.
பொருளாதாரம்தொகு
காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்தை சுற்றி பல தொழில்கள் உள்ளது.குறிப்பாக
- பஞ்சு நூல் தொழிற்சாலைகள் நிறைய அமைந்துள்ளன. மேலும் சைசிங் தொழிற்சாலைகளும் உள்ளது.
- இங்கு நெசவுத் தொழில் சிறப்பாக நடக்கிறது. குறிப்பாக பட்டு புடவை நெசவுகள் அதிகமாக காணப்படுகின்றன.
- இவ்வூரைச் சுற்றி பல ஏக்கர் விவசாய நிலமும் தென்னை விவசாயமும் செய்யப்படுகின்றது. மேலும் காய்கறி விவசாயமும் நடைபெறுகிறது.
- இப்பகுதியில் கறி பண்ணை கோழிகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.
மக்கள் தொகைதொகு
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரில் 8,453 பேர் உள்ளனர். இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் வசிக்கின்றனர். காமநாயக்கன் பாளையத்தின் சராசரி கல்வி அறிவு 83% ஆகும். இதில் 43% ஆண்களும் 40% பெண்களும் ஆவர். 13% மக்கள் 18 வயதினருக்கும் கீழ் உள்ளவர்கள் ஆவார்.[சான்று தேவை]
சிற்றூர்கள்தொகு
காமநாயக்கன் பாளையம் இரு மாவட்ட எல்லையில் இருந்தாலும் அஞ்சல் குறியீட்டு எண்ணின் மூலம் அருகாமையில் உள்ள கிராமங்களை ஒன்றினைக்கிறது. இவ்வூரின் சிற்றூர்களாக
- சௌண்டேஸ்வரி நகர்
- காந்தி நகர்
- கணபதி நகர்
- கந்தம்பாளையம்
- வி.வடுகபாளையம்
- கிருஷ்ணாபுரம்
- மத்தநாயக்கன் பாளையம்
- மானாசிபாளையம்
ஆகிய கிராமங்களை சிற்றூர்களாகக் கொண்டுள்ளது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம்தொகு
அப்போதைய தமிழக முதலமைச்சரான கருணாநிதியின் ஆட்சியில் தான் காமநாயக்கன் பாளையத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரபட்டன. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் பல்வேறு குட்டை நீர் தேக்கங்கள் கட்டப்பட்டன. மேலும் நவீன தெரு விளக்குகளும் காமநாயக்கன் பாளையம் - அன்னூர் சாலையை மாவட்ட சாலையில் இருந்து, மாநிலச் சாலையாக தரம் உயர்த்தியும் அதற்கான நிதியையும் ஒதுக்கினார். நீர்த் தேங்கங்களின் மூலம் பல நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்றன. மேலும் அரசு உயர்நிலை பள்ளி கட்டப்பட்டன. மேல்நிலை பள்ளிக்கு இடம் ஒதுக்கியும் 2011 ஆட்சி மாற்றத்தால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மேலும் கருணாநிதி ஆட்சியில் பரபிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி செய்யப்பட்டது.
போக்குவரத்துதொகு
இங்கிருந்து மாவட்ட தலைநகரான திருப்பூர் ரயில் நிலையம் 28கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் 40கி.மீ தொலைவில் கோவை ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 37கி.மீ தொலைவில் பொள்ளாச்சி ரயில் நிலையம் அமைந்துள்ளது. மேலும் கா.நா.பாளையத்திலிருந்து திருச்சூர், குருவாயூர், பொள்ளாச்சி, பெரிய நெகமம்,பல்லடம், திருப்பூர், சூலூர், கோயம்புத்தூர், பெருந்துறை,ஈரோடு, சங்ககிரி, சேலம், ஒசூர், பெங்களூர், கோபிச்செட்டிப்பாளையம்,சத்தியமங்கலம்,கருமத்தம்பட்டி,சாமளாபுரம்,அன்னூர்,புஞ்சை புளியம்பட்டி,உடுமலை,திருவண்ணாமலை,ஆனைமலை என அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது. திருப்பூர்-பொள்ளாச்சி வழிதடத்தில் 5நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வந்து செல்கிறது.மேலும் காமநாயக்கன் பாளையத்திலிருந்து சுற்று வட்டார சிறு கிராமங்களுக்கு இங்கிருந்து தான் பேருந்து செல்கிறது.
வங்கிகள்தொகு
- ஐசிஐசிஐ வங்கி
- ஸ்டேட் பாங்கு ஆப் இந்தியா
- பாங்கு ஆப் பரோடா
- வடுகபாளையம் தொடக்க வேளாண்மை மற்றும் கூட்டுறவு வங்கி
தானியிக்க வங்கி இயந்திரம் (ATM)தொகு
- ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்
- கரூர் வைஸ்யா வங்கி ஏடிஎம்
- ஹிடேச்சி வங்கி ஏடிஎம்
- ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்
கல்வி நிறுவனங்கள்தொகு
- கொங்குராஜா தொடக்கப்பள்ளி
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- அரசு உயர்நிலை பள்ளி
- அங்கன்வாடி மையங்கள் இரண்டு
- ஸ்கேட் தொழில்நுட்ப கல்லூரி
மேற்கோள்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.