காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் 2018ம் ஆண்டு முதல் புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டும் என நீண்ட கால கோரிக்கை உள்ளது. வளர்ந்து வரும் திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் நிர்வாக உள்ளாட்சி அமைப்பில் பெரும் மாற்றம் தேவைப்படுகிறது. இதனால் மக்கள் மற்றும் ஊராட்சி மன்றங்கள் தங்கள் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய சில ஒன்றியங்கள் தேவைப்படுகிறது. அந்த ஒன்றிய வரிசையில் காமநாயக்கன் பாளையமும் ஒன்றாகும்.

போக்குவரத்துதொகு

காமநாயக்கன் பாளையம் நகரில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களை போக்குவரத்து வசதியுடன் இணைக்கிறது.அவ்வகையில் பெங்களூர், ஒசூர், சேலம், சங்ககிரி பவானி, திருப்பூர் ,பல்லடம், பெருந்துறை,ஈரோடு, கோயம்புத்தூர்,சூலூர், செஞ்சேரிமலை,கருமத்தம்பட்டி, புஞ்சை புளியம்பட்டி, அன்னூர்,சாமளாபுரம், சத்தியமங்கலம், பெரிய நெகமம், பொள்ளாச்சி,சுல்தான்பேட்டை,வால்பாறை,உடுமலைப்பேட்டை,ஆனைமலை, கிணத்துக்கடவு,பண்ணாரி, அவிநாசி, திருச்சூர், குருவாயூர், கொல்லங்கோடு என தமிழக முக்கிய பகுதிகளுக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியதில் உள்ள ஊராட்சிகளுக்கு இங்கிருந்துதான் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொருளாதாரம்தொகு

காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்தைப் பொறுத்தவரை பல்வேறு தொழில்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதியால் பட்டு நெசவு துணிகள் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகின்றன. நெசவாளர்களுக்கு என ஒன்றியத்தில் பெரிய வதம்பச்சேரி ஊராட்சியில் நெசவாளர் உற்பத்தி கூட்டுறவு சங்கம் உள்ளது. மேலும் காடை பண்ணை வளர்ப்பிலும் முக்கிய தொழிலாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி பிராய்லர் கோழி உற்பத்தியிலும் விற்பனையிலும் முக்கிய இடத்தை காமநாயக்கன் பாளையம் பெற்றுள்ளது. மேலும் தென்னை தோட்டக்களின் மூலம் தேங்காய் ஏற்றுமதியிலும் முக்கிய பங்காற்றுகிறது. காற்கறி உற்பத்தியிலும் மிக முக்கிய பங்காற்றுகிறது. இங்கு கொள்முதல் செய்யும் காற்கறிகள் மாவட்ட தலைநகரான திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. கால்நடை வளர்ப்பிலும் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் காமநாயக்கன் பாளையத்தில் சைனிங், சைசிங், காடாதுணி, பஞ்சுநூல் தொழிற்சாலைகள், அட்டை பெட்டி தயாரிப்பு கம்பனி என மாவட்ட பொருளாதாரத்தில் இவ்வூர் மற்றும் இந்த ஒன்றியம் தனது சேவைகளை முக்கிய சேவைகளை அளிக்கின்றது. பல ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இங்கு பணி புரிகின்றனர். மேலும் காற்றாடி மூலம் மின்சாரம் உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இங்கு பல ஆயிரக்கணக்கான காற்றாடி மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காற்றாடி மின்சார உற்பத்தி வட்டார தலைமையகம் காமநாயக்கன் பாளையத்தில் இயங்குகிறது. இத்துணை ஒன்றிய பொருளாதார தலைநகரில் பேருந்து நிலையம் இல்லாதது வேதனைக்குரிய செய்தியாகும். பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுப் உள்ளது.

மக்கள் தொகைதொகு

2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் மக்கள் தொகை 82,235 பேர் வசிக்கின்றனர்.மேலும் காமநாயக்கன் பாளையம் மக்கள் தொகை 8.453 பேர் வசிக்கின்றனர்.

ஊராட்சி மன்றங்கள்தொகு

இந்த ஒன்றியம் உருவாக்குவதின் மூலம் கீழ்க்கண்ட ஊராட்சிகள் மிகவும் பயன்பெறும். மேலும் இந்த ஊராட்சிகள் யாவும் காமநாயக்கன் பாளையம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இந்த ஒன்றியத்தில் 11 கிராம ஊராட்சிகள் அடங்கியுள்ளன.

அடங்கியுள்ள பகுதிகள்தொகு

மேற்கோள்கள்தொகு