காமாக்யா - பகத் கி கோத்தி வாராந்திர விரைவுவண்டி
15624/15623 காமாக்யா - பகத் கி கோத்தி வாராந்திர விரைவுவண்டி (5624/15623 Kamakhya - Bhagat Ki Kothi weekly express), இந்திய இரயில்வே இயக்கும் விரைவுவண்டியாகும். இது அசாமில் உள்ள காமாக்யாவில் இருந்து, ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூருக்கு அருகில் உள்ள பகத் கி கோத்தி என்ற இடத்துக்கு சென்று திரும்பும்.[1]
வழித்தடம்
தொகு15624 என்ற எண் கொண்ட வண்டி ஒவ்வொரு வெள்ளியன்றும் மாலை 5:15 மணிக்கு காமாக்யாவில் இருந்து கிளம்பும். ஞாயிறன்று இரவு 10 மணிக்கு பகத் கி கோத்தி என்ற இடத்தை அடையும். 15623 என்ற எண் கொண்ட வண்டி, பகத் கி கோத்தியில் இருந்து ஒவ்வொரு செவ்வாய் அன்றும் 3:25 மணிக்கு கிளம்பி, வியாழன் இரவு 10:55 மணிக்கு காமாக்யாவை வந்தடையும்.[1]
நிறுத்தங்கள்:[1]
- ரங்கியா (அசாம்)
- புது பங்காய்காமோ (அசாம்)
- கோக்ராஜார் (அசாம்)
- புது கூச்பெகார் (மேற்கு வங்காளம்)
- புது ஜல்பாய்குரி (மேற்கு வங்காளம்)
- கிசன்கஞ்சு (பீகார்)
- கட்டிகார் சந்திப்பு (பீகார்)
- பரவுனி (பீகார்)
- பட்னா (பீகார்)
- முகல்சராய் (உத்தரப் பிரதேசம்)
- வாரணாசி (உத்தரப் பிரதேசம்)
- லக்னோ (உத்தரப் பிரதேசம்)
- காசியாபாத் (உத்தரப் பிரதேசம்)
- தில்லி சந்திப்பு
- தில்லி பாளையம்
- ரேவாரி (அரியாணா)
- லோஹாரூ (அரியாணா)
- சுரூ (ராஜஸ்தான்)
- ரத்தன்கட் (ராஜஸ்தான்)
- மேர்த்தா ரோடு சந்திப்பு (ராஜஸ்தான்)
- ஜோத்பூர் (ராஜஸ்தான்)