காமா-லினோலெனிக் அமிலம்

காமா-லினோலெனிக் அமிலம் (γ-Linolenic acid; gamma-linolenic acid; GLA) அல்லது காமோலெனிக் அமிலம் தாவர எண்ணெய்களில் காணப்படும் ஒரு கொழுப்பு அமிலமாகும். இதன் பயன் விவாதத்திற்கு உரியதானாலும் அழற்சியாலும், தன்னெதிர்ப்பு நோய்களாலும் ஏற்படும் இடர்பாடுகளை நீக்கும் உணவு சேர்க்கையாக இது விற்பனை செய்யப்படுகிறது. இதன் சரியான வேதிவடிவம் ரிலே (Riley) என்பவரால் விரித்துரைக்கப்பட்டது[1]. ஆல்ஃபா-லினோலெனிக், காமா-லினோலெனிக் அமில வடிவங்கள் இருந்தாலும், பீட்டா வடிவம் கிடையாது. முன்புக் கண்டறியப்பட்ட பீட்டா வடிவம் தூய்மைப்படுத்தும் முறையில் ஏற்பட்ட ஒரு பிழையாகும்[2].

காமா-லினோலெனிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அனைத்து ஒருபக்க-6,9,12-ஆக்டாடெக்காடிரையீனோயிக் அமிலம்
வேறு பெயர்கள்
காமோலெனிக் அமிலம், ஜி.எல்.ஏ.
இனங்காட்டிகள்
506-26-3 Y
ATC code D11AX02
ChEBI CHEBI:28661 Y
ChEMBL ChEMBL464982 Y
ChemSpider 4444436 Y
InChI
  • InChI=1S/C18H30O2/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20/h6-7,9-10,12-13H,2-5,8,11,14-17H2,1H3,(H,19,20)/b7-6-,10-9-,13-12- Y
    Key: VZCCETWTMQHEPK-QNEBEIHSSA-N Y
  • InChI=1/C18H30O2/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20/h6-7,9-10,12-13H,2-5,8,11,14-17H2,1H3,(H,19,20)/b7-6-,10-9-,13-12-
    Key: VZCCETWTMQHEPK-QNEBEIHSBP
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5280933
  • O=C(O)CCCC\C=C/C\C=C/C\C=C/CCCCC
UNII 78YC2MAX4O Y
பண்புகள்
C18H30O2
வாய்ப்பாட்டு எடை 278.44 g·mol−1
தோற்றம் நிறமற்ற எண்ணெய்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)
உணவிலுள்ள கொழுப்பு வகைகள்
இவற்றையும் காண்க

காமா-லினோலெனிக் அமிலம் [18:3 (n−6)], நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களான ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களின் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். அவை அனைத்தும் ஆறாமிடத்தில் பொதுவான ஒரு இறுதி கார்பன்–கார்பன் இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும்; அதாவது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து ஆறாம் பிணைப்பாகும். காமா-லினோலெனிக் அமிலம் பதினெட்டு கார்பன் தொடரியையும், மூன்று ஒருபக்க கார்பன்–கார்பன் இரட்டைப் பிணைப்பையும் கொண்ட கார்பாக்சிலிக் அமிலமாகும். இது, ஒமேகா-3 கொழுப்பு அமிலமான ஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்தின் மாற்றியமாகும்.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Yung-Sheng Huang, Vincent A. Ziboh (2001). Gamma-Linolenic Acid: Recent Advances in Biotechnology and Clinical Applications. AOCS Press. p. 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893997-17-0. பார்க்கப்பட்ட நாள் 2013-01-26.
  2. Eckey, EW (1954). Vegetable Fats and Oils (volume 123 of American Chemical Society monograph series). Reinhold. p. 542. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமா-லினோலெனிக்_அமிலம்&oldid=2767822" இலிருந்து மீள்விக்கப்பட்டது