காமூர்[தொடர்பிழந்த இணைப்பு] என்பது தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் எனத் தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சங்ககாலத்தில் காமூரை ஆயர்களின் தலைவனான கழுவுள் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவன் கொடை வழங்கும் பெருந்தகை. இவனை மருதனிள நாகனார் என்னும் புலவர் பாடிச் சிறப்பித்துள்ளார். [1]

வேளிர் அரசர்கள் 14 பேர் ஒன்று திரண்டு கழுவுளைத் தாக்கியபோது காமூர் கலங்கியது போலத், தலைவனை நம்பிய நெஞ்சம் அவன் பிரிந்தபோது கலங்கியது என ஒரு புலவர் குறிப்பிடுகிறார். [2]

கழுவுள் அரசனின் குடிமக்கள் அனிரைகளை மேய்த்து வாழ்ந்துவந்தனர். இவர்கள் அண்டர் என்று குறிப்பிடப்படுகின்றனர், பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் இவர்களின் ஊரைப் பாழாக்கினான் [3]

சான்று மேற்கோள் தொகு

  1. வென்வேல் மாவன் கழுவுள் காமூர் ஆங்கண் பூதம் தந்த பொறியரை வேங்கைத் தண்கமழ் புதுமலர் நாறும் அஞ்சிலோதி அகநானூறு 365.
  2. அகநானூறு 135
  3. அரிசில் கிழார் - பதிற்றுப்பத்து 71, பொருங்குன்றூர் கிழார் – பதிற்றுப்பத்து 88
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமூர்&oldid=3239556" இலிருந்து மீள்விக்கப்பட்டது