காயத்ரி (திரைப்படம்)

காயத்ரி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் கதை எழுத்தாளர் சுஜாதா எழுதிய காயத்ரி என்ற புதினத்தின் கதையாகும். நாவலில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வணிகரீதியாக தோல்வியுற்றது.[1]

காயத்ரி
இயக்கம்ஆர். பட்டாபிராமன்
தயாரிப்புவிஜய மீனா
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ஜெய்சங்கர்
ஸ்ரீதேவி
வெளியீடுஅக்டோபர் 7, 1977
நீளம்3560 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

திருச்சியில் வசிக்கும் பெண்ணான காயத்திரியை (ஸ்ரீதேவி) சென்னையில் வசிக்கும் பணக்காரரான ராஜரத்தினம் (ரஜினிகாந்த்) திருமணம் செய்து கொள்கிறார். ராஜரத்தினத்தின் சகோதரியாக வரும் சரசு திருமணத்தை நடத்தி வைக்கிறார். திருமணம் முடிந்தபிறகு காயத்திரி ராஜரத்தினத்தின் வீட்டிற்கு வந்து சேர்கிறார். ராஜரத்தினத்தின் குடும்பத்தில் இருண்ட ரகசியங்கள் இருப்பதை உணர்கிறாள்.

ராஜரத்தினம் உண்மையில் ஒரு நிலப்படத் தயாரிப்பாளர். ஒரு கட்டத்தில் இராஜரத்தினம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, ஏமாற்றி நீலப்படம் எடுத்து கறுப்பு சந்தையில் விற்பவர் என்றபது தெரியவருகிறது. மேலும் இராஜரத்தினத்திற்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆனதும், அவருக்கு பைத்தியம் பிடித்துள்ளதும் தெரிகிறது. எழுத்தாளர் செல்லப்பாவின் நண்பரான கணேஷ், காயத்திரியை ராஜரத்தினத்தின் பிடியில் இருந்து விடுவிக்க முயற்சிக்கிறார்.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

இப்படம் இதே பெயரிலான சுஜாதாவின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.[6] இப்படம் அவசரநிலை காலத்தில் உருவானது.[2] திரைக்கதையை பஞ்சு அருணாசலம் எழுதினார்.[4]

இசை தொகு

பஞ்சு அருணாசலம் பாடல் வரிகள் எழுத இளையராஜா இசையமைத்தார்.[7][8] சுஜாதா மோகன் இந்தப் படத்தின் மூலமாக பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.[9] "காலைப் பனியில் ஆடும் மலர்கள்" பாடல் மேசகல்யாணி ராகத்திலும்,[10] "வாழ்வே மாயமா வெறும் கதையா" பாடல் தர்மவதியிலும் அமைக்கப்பட்டது.[11][12]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "காலைப் பனியில் ஆடும் மலர்கள்"  சுஜாதா மோகன் 4:00
2. "வாழ்வே மாயமா வெறும் கதையா"  பி. எஸ். சசிரேகா 3:57
3. "ஆட்டம் கொண்டாட்டம்"  பி. சுசீலா 4:06
4. "உன்னை தான் அழைக்கிறேன்"  ஏ. எல். ராகவன், எஸ். ஜானகி 3:40
மொத்த நீளம்:
15:43

மேற்கோள்கள் தொகு

  1. "நாவல்கள், திரைப்படங்களாக உருமாறும்போது...". தினமணி. 6 ஏப்ரல் 2015. https://www.dinamani.com/editorial-articles/special-stories/2015/apr/06/நாவல்கள்-திரைப்படங்களாக-உர-1094199.html. 
  2. 2.0 2.1 2.2 Ramachandran 2014, ப. 71.
  3. 3.0 3.1 3.2 Ramachandran 2014, ப. 70.
  4. 4.0 4.1 4.2 ராம்ஜி, வி. (7 October 2020). "சுஜாதாவின் நாவல்; வில்லன் ரஜினி; பரிதாப ஸ்ரீதேவி; காப்பாற்றும் ஜெய்சங்கர்; பஞ்சு அருணாசலத்தின் 'காயத்ரி' - உயிரை உருக்கும் 'வாழ்வே மாயமா' பாடல்" (in ta). இந்து தமிழ் (நாளிதழ்) இம் மூலத்தில் இருந்து 22 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201122230121/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/588058-43-years-of-gayathri.html. 
  5. "Gayatri (1977)". The A.V. Club. Archived from the original on 27 July 2023. பார்க்கப்பட்ட நாள் 27 July 2023.
  6. "Rajni, the villain". ரெடிப்.காம். 21 May 2007. Archived from the original on 4 June 2021. பார்க்கப்பட்ட நாள் 4 June 2021.
  7. "Kavithaikuyil-Gayathri-Kaatrinile Varum Geetham Tamil Film Audio Cassette". Mossymart. Archived from the original on 4 June 2021. பார்க்கப்பட்ட நாள் 4 June 2021.
  8. "Gayathri (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 31 December 1977. Archived from the original on 4 August 2023. பார்க்கப்பட்ட நாள் 4 August 2023.
  9. "Ten Interesting Facts About Sujatha Mohan, Judge Of Sa Re Ga Ma Pa Keralam". ஜீ5. 8 November 2019. Archived from the original on 1 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 June 2021.
  10. Sundararaman 2007, ப. 135.
  11. Sundararaman 2007, ப. 167.
  12. ராமானுஜன், டாக்டர் ஆர். (21 September 2018). "ராகயாத்திரை 22: பொன்வானம் பன்னீர் தூவுது!". இந்து தமிழ் (நாளிதழ்). Archived from the original on 4 August 2023. பார்க்கப்பட்ட நாள் 4 August 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்ரி_(திரைப்படம்)&oldid=3824654" இலிருந்து மீள்விக்கப்பட்டது