காரையூர் சர்க்கரை மன்றாடியார்

காரையூர் சர்க்கரை மன்றாடியார் சிறந்த போர்வீரர் ஆவார். கொங்கு மண்டல சதகம் பாடல் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.[1] பொருநை, காவிரி ஆகிய ஆறுகள் பெருகி வளம் பெருக்கும் நாடு கொங்கு. சோழ அரசர்கள் இந்த நாட்டைத் துன்புறுத்தினர். கொங்கு நாட்டுக் காரையூரில் வாழ்ந்த மன்றாடியார் என்பவர் பாண்டியன் விரும்பியபடி, சோழரைப் புறமுதுகிட்டு ஓடும்படி விரட்டினார்.[2] இந்தச் செய்தியை மற்றொரு நூல் குறிப்பிடுகிறது.[3]

மேற்கோள்கள்தொகு

 1. கொங்கு மண்டல சதகம், பாடல் 57, முனைவர் ந. ஆனந்தி விளக்கம், சாரதா பதிப்பக வெளியீடு 2008 பதிப்பு, பக்கம் 82-85
 2.  
  பொருனையும் பொன்னியும் ஓங்கிப் பெருகிப் பொசிந்து மிகப்
  பெருமை உறு கொங்கிற் சென்னி இடர்செயப் பெருஞ்செழியன்
  அருமை உளந்தெரிந்து அன்னோன் முதுகிட் டகலவிசை
  வருமம் உறுகாரை மன்றாடியும் கொங்கு மண்டலமே.

 3.  
  விஜய நகரத்து மேவி இருக்கும்
  அசையா நரபதி தன் அன்பால் - இசைவு பெற
  கொங்குக்கு மேன்மைக் குறிப்பு மணி இழைத்த
  தங்கப் பொன் தண்டிகையும் தான் படைத்தோன்
  (பூந்துறை அவிநாசிக் கவுண்டன் வண்டு விடு தூது)