கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி 2

கார்டியன்ஸ் ஆஃப் த‌ கேலக்ஸி வால்யூம் 2 (தமிழ் : பிரபஞ்சத்தின் பாதுகாவலர்கள் . பாகம் 2) என்பது 2017 ல் வெளிவந்த அமேரிக்க திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ளனர்.

கதைக்களம் :தொகு

இந்த திரைப்படத்தின் கதை 2014 ல் வெளிவந்த கார்டியஸ் ஆப் தி கேலக்ஸி திரைப்படத்தை தொடர்ந்து அமைந்துள்ளது. விண்வெளி கதாநாயகர்களான ஸ்டார் லார்ட் , கமோரா, டிராக்ஸ் , க்ரூட் மற்றும் ராக்கெட் செவரைன் என்ற அமைப்புக்கு உதவி செய்கின்றனர். செவரைன் அமைப்பின் அரசி அய்ஷா அங்கே இருந்த பேட்டரிகள் என்ற சக்திவாய்ந்த சாதனத்தை ராக்கெட் அவரோடு எடுத்து சென்றதால் கார்டியன்ஸ் அமைப்பை துரத்துகிறார்.


இந்த நிலையில் ஸ்டார் லார்ட் , கமோரா மற்றும் டிராக்ஸ் ஆகியோர் தனியாகவும் ராக்கெட் மற்றும் க்ரூட் தனியாகவும் பிரிந்து செல்கின்றனர். ஸ்டார் லார்டை ஈகோ என்ற சக்திவாய்ந்த கிரகத்தின் அரசர் சந்திக்கிறார். மேலும் ஸ்டார் லார்ட் அவருடைய மகன்‌ என்றும் சொல்கிறார். ஸ்டார் லார்ட் குழுவினரை அவருடைய கிரகத்துக்கு‌ அழைத்து செல்கிறார்.

ராக்கைட் மற்றும் க்ரூட் இப்போது ரேவேஸர்ஸ் அமைப்பின் தலைவரும் ஸ்டார் லார்டின் வளர்ப்பு தந்தையுமான யோன்டு இப்போது அவருடைய சொந்த குழுவினரால் புறக்கணிக்கப்பட்டு சிறையில் அடைத்துவைக்கப்பட்டதை அறிந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர்.