கார்த்திக் அனிதா

தமிழ் திரைப்படம்

கார்த்திக் அனிதா (Karthick anitha ) 2009 ஆம் ஆண்டு புதுமுகங்கள் ரத்தன் திரிவிக்ரமா மற்றும் மஞ்சு நடிப்பில், ஸ்ரீஹரி இயக்கத்தில், சங்கர் வி. ராஜன் தயாரிப்பில், ஜாக் ஆனந்த் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4][5][6][7][8] இப்படம் 2009 ஏப்ரல் 10 அன்று வெளியானது.[9][10][11]

கார்த்திக் அனிதா
இயக்கம்ஸ்ரீஹரி
தயாரிப்புசங்கர் வி. ராஜஹான்
கதைஸ்ரீஹரி
இசைஜாக் ஆனந்த்
நடிப்புரத்தன் திரிவிக்ரமா
மஞ்சு
கோட்டா சீனிவாச ராவ்
ராசன் பி. தேவ்
ஒளிப்பதிவுகே. ஜி. சங்கர்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்கிங் மேஜிக்
வெளியீடுஏப்ரல் 10, 2009 (2009-04-10)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

கார்த்திக்கின் (ரத்தன் திரிவிக்ரமா) தாய் இறந்துவிட்டதால் தந்தை ராமச்சந்திரமூர்த்தியால் (கோட்டா சீனிவாசராவ்) வளர்க்கப்படுகிறான். தாயில்லாத அவனுக்கு தந்தையின் அன்பும் சரியாகக் கிடைக்காமல் வளர்கிறான். அவன் தங்கியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் அருகிலுள்ள வீட்டில் அனிதா (மஞ்சு) தன் பெற்றோர் மற்றும் தங்கையுடன் வசிக்கிறாள். சிறுவயதிலிருந்து நண்பர்களாக உள்ள இருவரும் தற்போது ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். இருவரின் தந்தையும் நண்பர்களாகப் பழகிவருகின்றனர். கல்லூரியில் கார்த்திக் செய்யும் குறும்புத்தனத்தை அனிதா கல்லூரி முதல்வரிடம் கூற அவர் கார்த்திக்கை கல்லூரியை விட்டு இடைநீக்கம் செய்கிறார். அதனால் கார்த்திக் அனிதாவை வெறுக்கத் தொடங்குகிறான்.

அனிதாவிற்கு கௌரி சங்கர் (அபிநய்) என்பவருடன் திருமணம் நிச்சயமாகிறது. அதன்பிறகே கார்த்திக்கைத் தான் காதலிப்பதை உணர்கிறாள் அனிதா. கார்த்திக்கும் அனிதாவை காதலிக்கிறான். இருவருக்குள்ளும் ஏற்படும் புரிதலின்மையால் தங்களின் காதலை வெளிப்படுத்திக்கொள்ளாமல் ஒருவரையொருவர் வெறுக்கின்றனர். கார்த்திக் அனிதாவைக் காதலிப்பதை அறியும் அவன் தந்தை, தன் மகனின் மனதைப் புரிந்து அவன் விருப்பத்தை நிறைவேற்றத் தவறியதை நினைத்து, வருந்தி திடீரென ஒருநாள் இறக்கிறார். யாரும் ஆதரவற்ற கார்த்திக்கிற்கு பெங்களூரில் வேலைகிடைப்பதால் அங்கு செல்கிறான். அனிதாவின் திருமண ஏற்பாடுகள் தொடர்ந்து நடக்கிறது. இறுதியில் இருவரின் காதலும் நிறைவேறியதா? இருவருக்கும் திருமணம் நடந்ததா? என்பது மீதிக்கதை.

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்தின் இசையமைப்பாளர் ஜாக் ஆனந்த். பாடலாசிரியர்கள் தாமரை, நா. முத்துக்குமார், யுகபாரதி மற்றும் ஸ்ரீனிவாஸ்.[12][13][14]

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 தட தட கார்த்திக், கல்யாணி 4:36
2 மேகமாய் பெல்லி ராஜ், சங்கீதா 4:38
3 காதல் சாலை ஹரிசரண் 4:12
4 அய்யய்யோ திப்பு, மாணிக்க விநாயகம் 3:41
5 அஞ்சு விரலைவைச்சான் ஹரிஷ் ராகவேந்திரா 5:10
6 ஜாக் அன்ப்ளக்கெட் ஜாக் ஆனந்த் 1:47

மேற்கோள்கள் தொகு

  1. "கார்த்திக் அனிதா". Archived from the original on 2010-02-04. 2019-03-19 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
  2. "கார்த்திக் அனிதா".
  3. "கார்த்திக் அனிதா".
  4. "கார்த்திக் அனிதா". 2017-05-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-19 அன்று பார்க்கப்பட்டது.
  5. "விமர்சனம்". 2022-01-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-19 அன்று பார்க்கப்பட்டது.
  6. "விமர்சனம்". 2009-04-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-19 அன்று பார்க்கப்பட்டது.
  7. "விமர்சனம்". Archived from the original on 2013-05-15. 2019-03-19 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
  8. "விமர்சனம்".
  9. "வெளியீடு".
  10. "வசூல்".
  11. "வசூல்".
  12. "பாடல்கள்".[தொடர்பிழந்த இணைப்பு]
  13. "பாடல்கள்". 2018-10-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-19 அன்று பார்க்கப்பட்டது.
  14. "பாடல்கள்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திக்_அனிதா&oldid=3685493" இருந்து மீள்விக்கப்பட்டது