கார்ல் வெய்சென்பெர்க்கு

ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளர் மற்றும் இயற்பியலாளர்

கார்ல் வெய்சென்பெர்க்கு (Karl Weissenberg) ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளராவார். பருப்பொருட்களின் பாய்வோட்டம் மற்றும் படிகவியல் தொடர்பான ஆய்வுகளுக்காக நன்கு அறியப்படுகிறார்.[1][2][3]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

வெய்சென்பெர்க் விளைவு, வைசன்பெர்க் எண் போன்ற பாய்மங்களின் பண்புகளுக்கு இவரது பெயர் வைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. படிகங்களின் விளிம்பு விலகலை ஆராய்வதற்கான கோனியோமீட்டரை இவர் கண்டுபிடித்தார். இதற்காக கார்ல் வெய்சென்பெர்க்கிற்கு 1946 ஆம் ஆண்டு இயற்பியல் நிறுவனம் துத்தெல் பதக்கத்தை வழங்கியது. ஐரோப்பிய பாய்வியல் சங்கம் இவரது நினைவாக வெய்சன்பெர்க் விருதை வழங்குகிறது.[3] செலுத்தப்படும் விசைக்கு பாய்மங்கள் வெளிப்படுத்தும் எதிர்வினையை அளக்கும் கருவிக்கு ரியோ கோனியோமீட்டர் எனப் பெயரிட்டு சிறப்பித்துள்ளது.[4]

வெய்சன்பெர்க்கு 1893 ஆம் ஆண்டு சூன் மாதம் 11 ஆம் தேதியன்று வியன்னா நகரில் பிறந்தார். வியன்னா, பெர்லின் மற்றும் செனா பல்கலைக்கழகங்களில் கணிதத்தை தனது முக்கிய பாடமாகப் படித்தார்.[1] சமச்சீர் குழுக்கள், மீநெறியம் மற்றும் அணி இயற்கணிதக் கோட்பாடுகளைப் பற்றிய கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். பின்னர் கணிதத்தையும் பரிசோதனை முறையையும் படிகவியல், வானியல் மற்றும் மருத்துவ அறிவியலுக்காகப் பயன்படுத்தினார். 1976 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு

மேலும் வாசிக்க

தொகு