காலங்காட்டுங் கருவிகளின் வரலாறு

காலத்தை நமக்கு எளிதாக காட்ட உதவும் கருவிகளே காலங்காட்டி கருவிகள்.

ஆதிகாலத்தில் காலத்தை அளப்பதற்குச் சூரியக் காலங்காட்டியும், நீர்க்கடி காரமும் எகிப்தியரால் கையாளப்பெற்றன. இடைக்காலங்களில் (Middle Age) ஒவ்வொரு எடையாக விழந்தோறும் முள் நகர்ந்து விடுகின்ற இயந்திரக் கடிகாரங்கள் வழக்கில் வந்தன. இவை நீர்க்கடி காரங்களை விடக் கொஞ்சம் வசதியானவை என்றாலும் துல்லியமானதாகக் கொள்ள இயலாது. ஒரு நொடி என்பது புவியின் சூரியச்சுற்றுக் காலத்தில் 3,15,56,925,9747 - இல் ஒரு பங்காகும். அதனால் ஒரு ஆண்டு 365 நாட்களும் சில மணிநேரங்களும் கொண்டது ஏன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டில் எடைகள் அளவுகள் குறித்த பொது மாநாட்டில் (General Conference on Weights and Measure) அணு வினாடி (Atomic second) என்ற புதிய அலகு உருவானது. சிசியம் மின்னணு 919,26,31.770 சுற்றுகள் (Spins) செய்வதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவே ஒரு அணுவினாடி.

1967 ஆம் ஆண்டில் எடைகள் அளவுகள் குறித்த பொது மாநாட்டில் (General Conference on Weights and Measure) அணு வினாடி (Atomic second) என்ற புதிய அலகு உருவானது. சிசியம் மின்னணு 919,26,31.770 சுற்றுகள் (Spins) செய்வதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவே ஒரு அணுவினாடி. வளிமண்டலத்தின் இயல்புகளோ புவிச் சுழற்சியின் சீரற்ற தன்மையோ இந்த அணுமுறைக் காலக்கணிப்பு நுட்பத்தில் குறுக்கிடாது. புவி தன் சுற்றுப்பாதையில் இண்டுக்கு ஒருநொடி வீதம் வேகம் தளர்ந்து கொண்டே வருகிற உண்மை கண்டுபிடிக்கப்பட்டபின் இப்புதிய அலகு பெரும் முக்கியத்துவம் பெற்றது.மேலும் இக்கணிப்பின்படி நேரத்தை நாம் துள்ளியமாக அளக்களாம்.

புவி இயக்கத் தளர்ச்சியூட்டும் பிழை கவனிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டுத்துவக்கத்திலும் உலகெங்கிலும் உள்ள கடிகாரங்களை எல்லாம் இணுக் கடிகாரத்தினைப் பார்த்து ஒரு நொடி திருத்த வேண்டியுள்ளது. பிரிட்டிஷ் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தினரால் தயாரிக்கப்பட்டதோர் அணுக் கடிகாரம் 300 ஆண்டுகளுக்கு ஒருநொடி என்கிற மட்டில்தான் துல்லியமாக மெதுவாகிறது.

ஜனவரி 1972 இல் “ஒத்தப் பேரண்டப் பொது நேரம்” (Co-ordinated Universal Time – UTC) எனப் புதியதோர் நேரம் உலகெங்கிலும் ஒருமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாரிசிலுள்ள “எடைகள் அளவுகள் குறித்த பொது மாநாட்டின்” தலைமைக் கடிகாரம் ஊலககெங்கிலும் உள்ள 18 முக்கியமையங்களில் பதிவாகும் அணுக்கடிகார நேரங்களின் சராசரியை அடிப்படையாகக் கொண்டது.

இந்த ஒத்தப் பேரண்டப் பொதுநேரம் ஒரு நாளின், ஒரு நொடியின் பத்து கோடியிலோர் பாகம் கூட அளவில் மாறாது. இதனால் அணுக்கடிகாரங்களில் இம்மியும் பிழை இருக்காது. இன்னும் இரண்டரை இலட்சம் ஆண்டுகளுக்கு நாம் அணுக்கடி காரத்தின் “முள்ளைத் திருப்பிவைக்கும்” நிலைமை வராது எனக் கூறப்படுகிறது.

இவை தவிர, “திட்டநேரம்” (Standard Time) என ஒரு அமைப்பு, பன்னாட்டு நேரங்களையும் இணைத்ததொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவை தவிர, “திட்டநேரம்” (Standard Time) என ஒரு அமைப்பு, பன்னாட்டு நேரங்களையும் இணைத்ததொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், இலண்டன் அருகேயுள்ள கிரீன்வீச் எனும் இடத்தின் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு திட்ட நேரம் (Standard Time) தீர்மானிக்கபடுகின்றது. இதன் படி பூமி 24 மண்டலங்களாகத் தீர்க்க ரேகைகளால் பகுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மண்டலமும் 15 வளைவு தாரம் கொண்டவை. ஆதாவது ஓவ்வொரு மண்டலத்தின் தலநேரமும் சராசரி ஓரு மணிக்கூர் வித்தியாசப்பட்டிருக்கும்.

முற்காலத் தமிழ் காலப் பாகுபாடுகள்

2 கண்ணிமை - 1 நொடி
2 கைநொடி - 1 மாத்திரை
2 மாத்திரை - 1 குரு
2 குரு - 1 உயிர்
2 உயிர் - 1 சணிகம்
12 சணிகம் - 1 வினாடி
60 வினாடி - 1 நாழிகை
2ணீ நாழிகை - 1 ஃரை
  • 3-3/2 நாழிகை - 1 முகூர்த்தம்
  • 4 சாமம் - 1 பொழுது
  • 2 பொழுது - 1 நாள்
  • 15 நாள் - 1 பக்கம்
  • 2 பக்கம்-30 நாள் - 1 மாதம்
  • 6 மாதம் - 1 அயனம்
  • 2 அயனம்-12 மாதம் - 1 ஆண்டு
  • 60 ஆண்டு - 1 வட்டம்

கிரீன்வீச் பூஜ்ய மண்டலத்தில் (0) இருந்து கிழக்கே ஒவ்வொரு மண்டலத்திலும் (ஒன்று முதல் பன்னிரெண்டு வரை) ஒரு மணிக்கூர் வீதம் காலம் முந்தியிருக்கும். இதனை மைனஸ் (-) என்றெழுதிக் காட்டுவர். அதாவது கிரீன்வீச் நேரம் கிடைக்க அந்தந்த மண்டல எண்களை அந்தந்த தல நேரத்தில் இருந்து குறைக்க வேண்டும். கிரீன்வீச் பூஜ்ய மண்டலத்தில் (0) இருந்து மேற்கே ஒவ்வொரு மண்டலத்திலும் (ஒன்று முதல் பன்னிரெண்டு வரை) ஒரு மணிக்கூர் வீதம் காலம் பிந்தியிருக்கும். இதனை ப்ளஸ் (+) என்றெழுதிக் குறிப்பர். அதாவது கிரீன்வீச் நேரம் கிடைக்க அந்தந்த மண்டல எண்களை, அந்தந்த தல நேரத்துடன் கூட்ட வேண்டும். கீரின்வீச் பூஜ்யத்தில் இருந்து தொடங்கி 12 ஆவது மண்டலத்தினை நேர்மத்தியில் பிரிப்பது தான் 180 ஆவது தீர்க்கரேகை. இதனைப் பன்னாட்டு நாள்கோடு (International Date Line) என்பர். நாள்தோறும் மேற்கே தாண்டினால் அடுத்த தினம் தொடங்கியிருக்கும். சுருக்கமாக் கூறினால் இரவின் முன்னிரவும், பின்னிரவும் சந்திக்கும் எல்லைதான் நாள்கோடு. நடுநிசிக்குமேல் நாளின் தொடக்கம் முற்பகல் (AM) என்றும், உச்சிக்கு மேல் பிற்பகல் (PM) என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.

Mrs.T.MARAGATHAM, HOUSE WIFE, W/O P.CHANDRA SEKHARAN, 8-156, SOUTH THERIVILAI, PUTHALAM POST, KANYAKUMARI DISTRICT. -629 602 PH.NO:04652-286766