கால வெளி வளைவு

ஐன்ஸ்டைனின் சார்பியற்படி முப்பரிமாண வெளியும் ஒரு பரிமாண காலமும் சேர்ந்து காலவெளியாக இயற்படும்பொழுது ஒரு வளைவு இயற்கையாகவே உள்ளதாகவும் அதுதான் நிறையீர்ப்பாக வெளிப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுதான் அண்டத்தின் கால வெளி வளைவு (Space-Time Curvature).

உலகமறிந்த சோதனை

தொகு

ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியல் இதை விளக்குகிறது. நிறையீர்ப்பு விசை என்பதே திணிவு அல்லது ஆற்றல் காலவெளியில் பரவியிருக்கும் வகையினால், பற்பல கனங்கள், அளவுகள் உள்ள குளிகைகள் நிறைந்த ஒரு மீள் பரப்பில் ஏற்படக்கூடிய கோணல்களும், சிறுகுழிகளும் பள்ளங்களும் போல், காலவெளியில் இயற்கை உரு கோணலாக்கப் (warping)படுகிறது. கன்னத்தில் விழும் சிறுகுழி (dimple)போலும் மற்றும் காயத்தினால் ஏற்படும் வடு அல்லது பள்ளம் (denting)போலும் ஏதோ ஒன்று ஏற்படுவதாகவும், இதுதான் காலவெளியின் வளைவு என்றும் சொல்லப்படுகிறது. இது நிறையீர்ப்பு விசையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இயக்குகிறது. இங்கு வளைவு என்பதற்கு வரையறை 19வது நூற்றாண்டிலேயே ரீமான் என்ற கணிதவியலரால் சொல்லப்பட்டது. வளைவு என்றால் கணிதத்தில் ஒரு இழுவம் ( tensor).இது நோக்குனரின் எந்தத்திசைப் போக்கானாலும் புவிப்பரப்பிலுள்ள முக்கோணங்களின் கோணக் கூட்டுத்தொகை   இலிருந்து எவ்வளவு வித்தியாசப்படுகிறது என்பதைச்சொல்லும் கணிதக் குறிகாட்டி. ஐன்ஸ்டைனின் சமன்பாடுகள் இவ்வளைவு இழுவம் அண்டப்பொருளின் இருப்பினால் எப்படி மாறுபடுகிறது என்பதைச்சொல்கிறது. 1919 இல் ஒரு சூரிய கிரகணத்தின்போது செய்த சோதனையில் இது உறுதியாகியது. ஐன்ஸ்டைனின் சமன்பாடுகள் சொல்லியபடியே சூரியனைத் தாண்டி வரும் ஒளி வளைவதுபோல் காணப்பட்டது. உண்மையில் ஒளி வளையவில்லை. அது காலவெளியில் புவிப்பரப்புக் கோட்டில்தான் சென்றது. ஆனால் ஒளி வளைவது போல் நமக்குத் தெரிந்ததென்னவோ உண்மை. இப்படித் தோன்றும் என்பதுதான் ஐன்ஸ்டைனின் கணிதத் தீர்ப்பு; அதற்குக்காரணம் அவ்வளவு திணிவுள்ள சூரியன் தனக்கருகில் உள்ள காலவெளியில் 'வளைவை' உண்டாக்கியது தான்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

துணைநூல்கள்

தொகு

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால_வெளி_வளைவு&oldid=2740926" இலிருந்து மீள்விக்கப்பட்டது