காளிதாஸ் கோலம்பகர்
காளிதாஸ் நீல்காந்த் கோலம்பகர் (Kalidas Nilkanth Kolambkar) மகாராட்டிராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மும்பையில் உள்ள வடாலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து[1] பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்று மகாராட்டிர சட்டமன்றத்தில் 9 முறை உறுப்பினராக இருந்துள்ளார்.[2].இவர் தொடரந்து 40 ஆண்டுகள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராக இருந்தமைக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.[3]
காளிதாஸ் நீல்காந்த் கோலம்பகர் | |
---|---|
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2009 – பதவியில் உள்ளார் | |
முன்னையவர் | புதிய தொகுதி |
தொகுதி | வடலா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | |
வேலை | அரசியல்வாதி |
கோலம்ப்கர் 2004-ஆம் ஆண்டில் சிவசேனா வேட்பாளராக நைகான் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] பின்னர் இவர் காங்கிரசில் சேர்ந்தார். 2009 முதல் 2024 வரையான சட்டமன்றத் தேர்தல்களில் மகாராட்டிராவின் மும்பையின் வடலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6] பின்னர் இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டில் வடலாவில் இருந்து மீண்டும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wadala Assembly constituency
- ↑ Wadala Assembly Constituency, Maharashtra – Winner Kalidas Nilkanth Kolambkar
- ↑ மும்பை: 40 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருக்கும் காளிதாஸ்; கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பாரா?
- ↑ "Madhya Pradesh Assembly Election Results in 2004".
- ↑ "1 year MLA report card: Kalidas Kolambkar from Wadala". dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Wadala Election Result". electiontrends.in. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
- ↑ "Kalidas Nilkanth Kolambkar of INC WINS the Wadala constituency". .indianballot.com. Archived from the original on 28 April 2016. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
- ↑ "Wadala (Maharashtra) Assembly Constituency Elections". elections.in. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
- ↑ Wadala-Naigaon MLA Kalidas Kolambkar set to join BJP