காவேரிப்பட்டினம் - வறண்ட நிலத்தாவரங்கள்

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்த்திலிருந்து சுமார் 12 கி.மீ.தொலைவில் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் அமைந்துள்ளது. அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான தட்டக்கல், காட்டுக்கொல்லை, மொடக்கு, சென்றாயன்பட்டி, நாகரசம்பட்டி ஆகிய கிராமங்களில் பல்வேறு வகையான வறண்ட நிலத்தாவரங்கள் காணப்படுகின்றன. இவ்வகையான தாவரங்கள் மணற்பாங்கான இடங்களில் வளரக்கூடியவை ஆகும். இவை பாலைவனத் தாவரங்கள் எனவும் அழைக்கப்படுகிறது.

அதிக வெப்பநிலை, ஒளிச்செறிவு, காற்று வீச்சு மற்றும் மிகவும் குறைவான நீர் ஆகியவைகளை இத்தாரவங்கள் எதிர்கொள்கின்றன. இக்கிராமங்களில் எருக்கு, வெள்ளை எருக்கு, சப்பாத்திக் கள்ளி, பிரண்டை, திருக்கள்ளி, காட்டு ஈச்சம், உனிமுல் செடி, சிறு ஈச்சம், இலந்தை, குண்டு ஒட்டகங்காய் செடி, ஊகம் புல், சிறு மூங்கில், கொறுக்காந்தட்டை, கண்டங்கத்திரி, நெறுஞ்சி முள், எடதாரி தழை, தொட்டால் சினுங்கி செடி மற்றும் கற்றாழை ஆகியவை அதிகமாக வளர்ந்துள்ளன.