கசுக்கடரியோ பிராந்தியம்

(காஷ்கடார்யோ பிராந்தியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காஷ்கடார்யோ பிராந்தியம் (Qashqadaryo Region. (உஸ்பெக் மொழி: Qashqadaryo viloyati, Қашқадарё вилояти, قەشقەدەريا ۋىلايەتى; பழைய பலுக்கல் Kashkadarya Region) என்பது உஸ்பெகிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும், இது நாட்டின் தென்கிழக்கு பகுதியில் காஷ்கடார்யோ ஆற்றுப் படுகையிலும், பாமிர் அலே மலைகளின் மேற்கு சரிவுகளிலும் அமைந்துள்ளது. இந்த பிராந்தியமானது தென்மேற்கில் தஜிகிஸ்தான் நாட்டையும், தென்கிழக்கில் சுர்சொண்டாரியோ பிராந்தியத்தையும், வடக்கில் துருக்மெனிஸ்தான் நாட்டு மற்றும் சமர்கண்ட் பிராந்தியத்தையும், வடமேற்கில் புகாரா பிராந்தியம் மற்றும் சுர்சொண்டாரியோ பிராந்தியத்துடன் எல்லைகளைக் கொண்டு உள்ளது. இந்த பிராந்தியம் 28,400 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. மக்கள் தொகை சுமார் 2,067,000 (2007) என மதிப்பிடப்பட்டுள்ளது,[1] பிரதேச மக்களில் சுமார் 73% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

நிர்வாக பிரிவுகள்தொகு

பிராந்திய தலைநகராக கர்ஷி நகரம் (கர்ஷி) (மக்கள் தொகை 177,000 ) உள்ளது. பிராந்தியத்தின் பிற முக்கிய நகரங்களாக பெஷ்கென்ட் நகரம், சிராக்கி நகரம் (சிரோச்சி), குசார் நகரம் (கியூசர்), கிதாப் நகரம், கோசன் நகரம், மைரிஷ்கோர் நகரம், முபோரக் நகரம், கமாஷி நகரம் (கமாஷி), ஷாரிசாப்ஸ் நகரம், ஷுர்பஜார் நகரம் மற்றும் யக்காபாக் நகரம் ஆகியவை உள்ளன.

 
காஷ்கடார்யா பிராந்தியத்தின் மாவட்டங்கள்

காஷ்கடார்யோ பிராந்தியம் தற்போதய நிலையில் ( As of 2009 ) பதின்மூன்று நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[2] அவை 1. சிரச்சி மாவட்டம் ( தலைநகரம் சிரச்சி ), 2. தெஹ்கனாபாத் மாவட்டம் ( தலைநகரம் கரஷிகா ), 3. குசார் மாவட்டம் (தலைநகரம் குசார்), 4. காமாஷி மாவட்டம், 5. கர்ஷி மாவட்டம் (தலைநகரம் பேஷ்கண்ட் ), 6. கோசன் மாவட்டம் ( தலைநகரம் கோசன் ), 7. காஸ்பி மாவட்டம் ( தலைநகரம் முக்லன் ), 8. கிடோப் மாவட்டம் ( தலைநகரம் கிடோப் ), 9. மைரிஷ்கோர் மாவட்டம் ( தலைநகரம் யாங்கி-மிர்ஷ்கோர் ), 10. முபோரக் மாவட்டம் ( தலைநகரம் முபோர்க் ), 11. நிஷோன் மாவட்டம் ( தலைநகரம், யங்கி-நிஷோனா ) 12. ஷாக்ரிசாப்ஸ் மாவட்டம் ( தலைநகரம், ஷாக்ரிசாப்ஸ் ), 13. யக்கபாக் மாவட்டம் ( தலைநகரம் யக்கபாக் ) போன்றவை ஆகும்.

மாவட்ட பெயர் மாவட்ட தலைநகரம்
1 சிரச்சி மாவட்டம் ( சிரோச்சி ) சிரச்சி
2 தெஹ்கனாபாத் மாவட்டம் கரஷிகா
3 குசார் மாவட்டம் குசார்
4 காமாஷி மாவட்டம்
5 கர்ஷி மாவட்டம் பேஷ்கண்ட்
6 கோசன் மாவட்டம் கோசோன்
7 காஸ்பி மாவட்டம் முக்லன்
8 கிடோப் மாவட்டம் கிடோப்
9 மைரிஷ்கோர் மாவட்டம் யாங்கி-மிர்ஷ்கோர்
10 முபோரக் மாவட்டம் முபோர்க்
11 நிஷோன் மாவட்டம் யங்கி-நிஷோனா
12 ஷாக்ரிசாப்ஸ் மாவட்டம் ஷாக்ரிசாப்ஸ்
13 யக்கபாக் மாவட்டம் யக்கபாக்

லத்தீன் எழுத்துகளில் உள்ள மாவட்ட பெயர்கள் உஸ்பெகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி ஆகும்.[2]

நிலவியல்தொகு

பிராந்தியத்தின் காலநிலை என்பது பொதுவாக வறண்ட ஐரோப்பிய காலநிலை என்னும் கண்ட காலநிலை ஆகும். இது ஓரளவு அரை வெப்பமண்டலமாகுமாக உள்ளது.

பொருளாதாரம்தொகு

பிராந்தியத்தின் இயற்கை வளங்களில் குறிப்பிடத்தக்க அளவில் பாறை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவளி இருப்புக்கள் உள்ளன. முபரேக் எண்ணெய் மற்றும் எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலை பிராந்தியத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையாக உள்ளது. மேலும் இங்கு கம்பளி தயாரிப்பு, ஜவுளி, சிறுதிறமான தொழில், உணவு பதப்படுத்துதல் மற்றும் கட்டுமான பொருட்கள் தொழில் போன்றவை உள்ளன. இங்கு மேற்கொள்ளும் முக்கிய வேளாண் பணிகளில் பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் செய்யப்படுகின்றன மேலும் கால்நடை வளர்ப்பு போன்றவையும் உள்ளன. பிராந்தியத்தில் நீர்ப்பாசன வசதிக்கான உள்கட்டமைப்ப அமைப்பாக நம்பகமான நீர் ஆதாரமாக பெரிய டோலிமார்ஜோன் நீர்த்தேக்கம் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் நன்கு வளர்ந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு உள்ளது, 350 கி.மீ.க்கு மேற்பட்ட தொடர்வண்டி பாதைகள் மற்றும் 4000 கி.மீ.க்கு மேற்பாட்ட சாலை வசதி உள்ளது.

கலாச்சாரம்தொகு

அமீர் தேமூரின் பிறப்பிடமான ஷாரிசாப்ஸ் நகரம் இப்பகுதியில் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.

குறிப்புக்கள்தொகு