கிசித்தீசு சந்திர நியோகி

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

கிசித்தீசு சந்திர நியோகி (Kshitish Chandra Neogy, 1888–197_) அல்லது கே. சி. நியோகி மேற்கு வங்கத்தை சோ்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் உறுப்பினராகவும், இந்தியாவின் முதல் நிதி ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார்.

இவா் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். 1920 ல் மத்திய சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் வங்காளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் மாநில சட்டசபைக்கு திரும்பினார். இந்திய அரசில் பல முக்கிய பதவிகளை அவர் வகித்தார். திட்டமிடல் ஆலோசனை வாரியத்தின் தலைவர் மற்றும் இந்திய ரயில்வே விசாரணைக் குழு ஆகியவற்றின் தலைவராக இருந்தார். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[1]

விடுதலைக்குப் பிறகு சவகர்லால் நேருவின் கீழ் சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் உறுப்பினராகப் பதவி ஏற்றார். பின்னர் அவர் மறுவாழ்வு அமைச்சராகவும் பின்னர் வர்த்தக அமைச்சராகவும் இருந்தார்.[2] ஆர்.கே.சண்முகம் செட்டி பதவி துறந்த பிறகு, 1950 இல் இந்தியாவின் இரண்டாவது நிதி மந்திரியாக நியோகி பொறுப்பேற்றார். அவர் 35 நாட்களுக்கு மட்டுமே பதவி வகித்தார்.[3] சியாமா பிரசாத் முகர்ஜி உடன் சேர்ந்து பதவியில் இருந்து விலகினார்.

1951 நவம்பர் 22 அன்று இந்தியாவின் முதல் நிதி ஆணையத்தின் தலைவராக இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.[4]

நியோகி, மனைவி லீலா ஆகிய இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருந்தனர். அவரது மூத்த மகன் பிரித்விஷ் நியோகி (1918-91), அமெரிக்காவிலுள்ள மாவோவாவின் ஹவாய் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றின் பேராசிரியராக இருந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
  2. Chaudhary, Valmiki. Dr. Rajendra Prasad: Correspondence and Select Documents. பக். 326. https://books.google.com/books?id=N1ZEqWRk7HsC&printsec=frontcover. 
  3. http://economictimes.indiatimes.com/slideshow/4112762.cms
  4. http://fincomindia.nic.in/DispFull.aspx?id=6