கிண்டி தொடருந்து நிலையம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை, கிண்டி தொழிற்பேட்டைக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம்.

கிண்டி தொடருந்து நிலையம் (Guindy railway station, நிலையக் குறியீடு:GDY) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.

கிண்டி
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
கிண்டி தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்அண்ணா சாலை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்13°0′31″N 80°12′47″E / 13.00861°N 80.21306°E / 13.00861; 80.21306
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுGDY
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
முந்தைய பெயர்கள்தென்னிந்திய இரயில்வே
அமைவிடம்
கிண்டி is located in சென்னை
கிண்டி
கிண்டி
சென்னை வரைபடத்தில் உள்ள இடம்
கிண்டி is located in தமிழ் நாடு
கிண்டி
கிண்டி
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
கிண்டி is located in இந்தியா
கிண்டி
கிண்டி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் அண்ணா சாலையில், தேசிய நெடுஞ்சாலை 45 இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 12மீ உயரத்தில் உள்ளது.

வரலாறு தொகு

இந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் இரயில் சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1]

படங்கள் தொகு

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Electric Traction - I". IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

வெளி இணைப்புகள் தொகு