கிந்தா மாவட்டம்

மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள மாவட்டம்

கிந்தா மாவட்டம் (ஆங்கிலம்: Kinta District; சீனம்; 近打) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் இரு மன்றங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஈப்போ மாநகர் மன்றம் (Ipoh City Council), பத்து காஜா மாவட்ட மன்றம் (Batu Gajah District Council) ஆகிய இரு நகர மன்றங்கள். ஈப்போ மாநகர் மன்றம், ஈப்போவில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. பத்து காஜா மாவட்ட மன்றம், பத்து காஜா நகரத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.

கிந்தா மாவட்டம்
Daerah Kinta
பேராக்
கிந்தா மாவட்டம் அமைவிடம் பேராக்
கிந்தா மாவட்டம் அமைவிடம் பேராக்
ஆள்கூறுகள்: 4°35′N 101°05′E / 4.583°N 101.083°E / 4.583; 101.083
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
தொகுதிபத்து காஜா
பெரிய நகரம்ஈப்போ
நகராட்சிஈப்போ நகராண்மைக் கழகம்
(வட கிந்தா)
பத்து காஜா மாவட்ட மன்றம்
(மேற்கு கிந்தா)
அரசு
 • மாவட்ட அதிகாரிதர்மிசி மனாப் (Tarmidzi Manap)[1]
பரப்பளவு
 • மொத்தம்1,305 km2 (504 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்7,44,715
 • மதிப்பீடு 
(2015)
8,10,400
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+8 (பயன்பாடு இல்லை)
இடக் குறியீடு+6-05
வாகனப் பதிவுA

மலேசியாவில் மக்கள் தொகையின் பெருக்கத்தைப் பொருத்து ஒரு மாவட்ட மன்றம், ஒரு நகர மன்றமாக உயர்வு காண முடியும்.ஒரு நகர மனறம் ஒரு மாநகர் மன்றமாக மாற்றம் காண முடியும். City Hall எனப்படும் மாநகர் மாளிகையின் மூலமாக கோலாலம்பூர், வட கூச்சிங், கோத்தா கினாபாலு ஆகிய நகரங்கள் நிர்வாகம் செய்யப் படுகின்றன. மலேசியாவின் இதர மாநகரங்கள் மாநகர் மன்றங்களினால் நிர்வாகம் செய்யப்ப்படுகின்றன.

18ஆம் நூற்றாண்டில் கிந்தா மாவட்டம் ஈய உற்பத்தியில் மிகவும் புகழ் பெற்று விளங்கியது. உலகத்திலேயே அதிகமான ஈயம் கிந்தா மாவட்டத்தில் தான் எடுக்கப்பட்டது.[2]

நிர்வாகப் பிரிவுகள்

தொகு
 
கிந்தா மாவட்ட வரைப்படம்
 
ஈப்போ நகராண்மைக் கழகம்
 
ஈப்போ மாநகரில் கலாசார நிக்ழச்சி - 2017

கிந்தா மாவட்டம் 5 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[3]

  • பெலாஞ்சா (Belanja)
  • சுங்கை தெராப் (Sungai Terap)
  • சுங்கை ராயா (Sungai Raia)
  • தஞ்சோங் துவாலாங் (Tanjung Tualang)
  • உலு கிந்தா (ஈப்போ புறநகர்ப் பகுதிகள்)

அரசு

தொகு

கிந்தா மாவட்டம் இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

1. பேராக் மாநில தலைநகரான ஈப்போவைத் தளமாகக் கொண்ட ஈப்போ நகராண்மைக் கழகம்.

2. பத்து காஜா நகரத்தை மையமாகக் கொண்ட பத்து காஜா மாவட்ட மன்றம்.

மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்

தொகு

பின்வரும் கிந்தா மாவட்ட தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[4]

கிந்தா மாவட்ட இனக்குழுக்கள்: 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு
இனம் மக்கள் தொகை விழுக்காடு
மலாய்க்காரர்கள் 308,998 41.5%
சீனர்கள் 326,408 43.8%
இந்தியர்கள் 107,554 14.4%
மற்றவர்கள் 1,755 0.2%
மொத்தம் 744,715 100%

மலேசிய நாடாளுமன்றம்

தொகு

மலேசிய நாடாளுமன்றத்தில் கிந்தா மாவட்டப் பிரதிநிதிகளின் பட்டியல் (டேவான் ராக்யாட்) (2021). மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கின்றனர். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் நாடாளுமன்ற மாளிகை உள்ளது. அங்குதான் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P63 தம்பூன் அகமட் பைசால் அசுமு பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.)
P64 ஈப்போ தீமோர் வோங் கா வோ (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க)
P65 ஈப்போ பாராட் எம். குலசேகரன் (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க)
P66 பத்து காஜா வி. சிவகுமார் (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க)
P70 கம்பார் சூ கியோங் சியோங் (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க)
P71 கோப்பேங் லீ பூன் சாய் (பாக்காத்தான் ஹரப்பான்) (பி.கே.ஆர்)

பேராக் மாநில சட்டமன்றம்

தொகு

பேராக் மாநில சட்டமன்றத்தில் கிந்தா மாவட்டப் பிரதிநிதிகள் (2021)

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P63 N23 மஞ்சோய் அஸ்முனி அவி (பாக்காத்தான் ஹரப்பான்) (அமானா)
P63 N24 உலு கிந்தா முகமட் அராபாட் வரிசை முகமட் (பாக்காத்தான் ஹரப்பான்) (பி.கே.ஆர்.)
P64 N25 கெனிங் ஜெனி சோய் சி ஜென் (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க)
P64 N26 தெபிங் திங்கி அப்துல் அசீஸ் பாரி (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க)
P64 N27 பாசிர் பிஞ்சி லீ சுவான் ஹோ (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க)
P65 N28 பெர்ச்சாம் ஓங் பூன் பியாவ் (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க)
P65 N29 கெப்பாயாங் கோ சுங் சென் (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க)
P65 N30 புந்தோங் சிவசுப்பிரமணியம் ஆதிநாராயணன் (பெரிக்காத்தான் நேசனல்) (பி.பி.பி.எம்.)
P66 N31 ஜெலாப்பாங் சியா போ ஹியான் (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க)
P66 N32 மெங்லெம்பு சாவ் காம் பூன் (பாக்காத்தான் ஹரப்பான்) (ஜ.செ.க)
P66 N33 துரோனோ பால் யோங் சூ கியோங் (பெரிக்காத்தான் நேசனல்) (பி.பி.பி.எம்.)
P70 N41 மாலிம் நாவார் லியோங் சியோக் கெங் சுயேட்சை
P70 N43 துவாலாங் செக்கா நோலி அஸ்லின் முகமட் ராட்சி (பெரிக்காத்தான் நேசனல்) (பி.பி.பி.எம்.)
P71 N44 சுங்கை ராப்பாட் முகமட் நிசார் ஜமாலுடின் (பக்காத்தான் ஹரப்பான்) (அமானா)
P71 N45 சிம்பாங் பூலாய் டான் கார் கிங் (பக்காத்தான் ஹரப்பான்) (பி.கே.ஆர்.)

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Laman Web Pejabat Daerah Dan Tanah - Perutusan Pegawai Daerah". pdtbatugajah.perak.gov.my.
  2. Khoo Salma Nasution & Abdur-Razzaq Lubis. Kinta Valley: Pioneering Malaysia's Modern Development. Ipoh: Perak Academy (2005). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-42113-09
  3. [pdtbatugajah.perak.gov.my. கிந்தா மாவட்டத்தின் 5 துணை மாவட்டங்கள்.]
  4. மலேசியா 2010 மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்

மேலும் காண்க

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kinta District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிந்தா_மாவட்டம்&oldid=3995617" இலிருந்து மீள்விக்கப்பட்டது