கிப்சின் ஆற்றல்
வெப்பவியக்கவியலில் கிப்ஸ் பயன்தரு ஆற்றல் (Gibbs free energy) அல்லது (பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் பரிந்துரைத்த பெயர்: கிப்சின் ஆற்றல் (Gibbs energy), அல்லது free enthalpy[1] என்பது ஒரு வெப்பவியக்கவியல் அமைப்பில் இருந்து மாறா வெப்பநிலையிலும் (சமவெப்பநிலை), மாறா அழுத்தத்திலும் (சமவழுத்தச் செயல்முறையிலும்), பெறப்படும் பயன்படு ஆற்றல் அல்லது வேலை ஆகும். இது வெப்பவியக்கவியலில் உள்ள நிலையாற்றல் ஆகும். கிப்சின் ஆற்றல் மாற்றத்தை () எனக் குறிப்பர்.
- : தானாக நிகழும் வேதியற்வினை (exergone Reaction).
- : சமநிலை.
- : புறத்திலிருந்து பெறப்படும் ஆற்றலால் நிகழும் வேதியற்வினை (endergone Reaction).
சிறப்பியல்
தொகுவரைவிலக்கணங்கள்
தொகுகிப்சின் சுயாதீன ஆற்றல் சக்தியானது பின்வருமாறு தரப்படுகின்றது.
dG = dH - T.dS
dG - கிப்சின் சுயாதீன ஆற்றல் சக்தி
dH - எந்தல்பி , ெவப்பவுள்ளுைற மாற்றம்
T - ெவப்பநிைல (ெகல்வின்)
dS - எந்திரப்பி
கிப்சின் பயனுறு ஆற்றல் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
- G(p,T) = U + pV − TS
அல்லது
- G(p,T) = H − TS
இங்கு:
- U - அக ஆற்றல் (அனைத்துலக முறை அலகுகள் (SI) அலகு: ஜூல்)
- p - அழுத்தம் (SI அலகு: பாசுக்கல்)
- V - கனவளவு (SI அலகு: மீ3)
- T - வெப்பநிலை (SI அலகு: கெல்வின்)
- S - சிதறம் (SI அலகு: ஜூல் / கெல்வின்)
- H - வெப்ப அடக்கம் (SI அலகு: ஜூல்)
மேற்கோள்கள்
தொகு- ↑ Greiner, Walter; Neise, Ludwig; Stöcker, Horst (1995). Thermodynamics and statistical mechanics. Springer-Verlag. p. 101.