கிரிட் விகிதம்

கிரிட் விகிதம் (Grid Ratio) என்பது உடலில் தோன்றும் சிதறிய கதிர்கள் படத்தாளினை வந்தடையாமல் அவைகளைத் தவிர்க்க பயன்படும் ஓர் அமைப்பாகும். கிரிட்டில் அமைந்துள்ள ஈயப்பட்டையின் உயரத்திற்கும் இரு பட்டைகளுக்கு இடைப்பட்ட எக்சு கதிர்களைக் கடத்தும் பகுதியின் அகலத்திற்கும் உள்ள விகிதமாகும்.

கிரிட் விகிதம் கிரிட்டின் திறனை அளவிடப் பயன்படும் ஓர் அளவாகும். எந்த அளவிற்கு அது சாய்வாகச் செல்லும் கதிர்களை தடுத்து நிறுத்துகிறது என்பதனைக் காட்டுகிறது.

r = h/ D என்பதற்குச் சமமாகும்.

இங்கு h என்பது பட்டையின் உயரத்தினையும், D என்பது இரு பட்டைகளுக்கிடையேயான அகலத்தினையும் குறிக்கின்றன. இதன் மதிப்பு 5 முதல் 16 வரையிலும் இருக்கிறது. பயனுள்ள கதிர்களையும் அது ஏற்கிறது. கிரிட் பயன்பாட்டால் கதிர்படத்தின் ஒப்புமை அதிகரிக்கிறது.

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிட்_விகிதம்&oldid=1825244" இலிருந்து மீள்விக்கப்பட்டது