கிரியா தீபிகை

கிரியா தீபிகை என்பது ஒரு பத்ததி நூல். இது தமிழர் வடமொழியில் எழுதிய நூல். சிவாக்கிர யோகிகள் இதன் ஆசிரியர். இவர் வாழ்ந்த காலம் 16-ஆம் நூற்றாண்டு.

இந்த நூல் எட்டு படலங்கள் கொண்டது. ஆசிரியரின் உரைநடை, ஆகம சுலோகங்கள், சில இடங்களில் பக்கம் பக்கமாக வடமொழி சுலோகங்கள் முதலானவற்றைக் கொண்ட நூல் இது. இந்த நூலில் கிரியைப் பகுதிகள் மிகுதியாக உள்ளதால் இதனை 'மந்திர சாத்திரம்' என்பர்.

(காலைக்கடன், பிராணாயாமம், தர்ப்பணம், நித்திய கருமம்)[1] (சூரியபூசை, சிவபூசை, உணவு உண்ணும் சடங்குகள்) [2] (பவித்திரம், சாதுரியம்) [3] (நிவாரண தீட்சை, ஞான தீட்சை) [4] (சன்னியாச விதிமுறைகள்) [5] (ஆசிரியர், மாணவர் வழிபாட்டு முறை) [6] (அந்திமக் கிரியை) [7] (சமாதி விதிமுறை) [8] முதலானவை இதில் கூறப்பட்டுள்ளன.

கருவிநூல்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. முதல் படலம்
  2. படலம் 2
  3. படலம் 3
  4. படலம் 4
  5. படலம் 5
  6. படலம் 6
  7. படலம் 7
  8. படலம் 8
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரியா_தீபிகை&oldid=1183817" இலிருந்து மீள்விக்கப்பட்டது