கிரியோ எலிமென்ட்ஸ்/புரோ

கிரியோ எலிமென்ட்ஸ் அல்லது புரோ/எஞ்சினியர் அல்லது கிரியோ பேராமெட்ரிக் என்பது கணிப்பொறிவழி வடிவமைப்பு (Computer Aided Designing), கணிப்பொறிவழி தயாரிப்பு (Computer Aided Manufacturing) மற்றும் கணிப்பொறிவழி பொறியியல் (Computer Aided Engineering) போன்றவற்றில் முப்பரிமான வடிவமைப்பிற்கு உதவும் ஒரு மென்பொருள் ஆகும். இது பேராமெட்ரிக் டெக்னாலஜி கார்போரேசன் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த மென்பொருள் மூலம் திடப்பொருள் மாதிரியாக்கம் (Solid Modeling ), கூட்டுப்பொருள் உருவாக்கம் (Assembly Modeling), உருவரைவு (Drafting), சிற்றுறுப்புப் பகுப்பாய்வு (Finite Element Analysis) போன்றவற்றை உருவாக்கலாம். பொதுவாக இயந்திர பொறியாளர்கள் ஒரு பொருளை உருவாக்குவதற்கு தேவையான அடிப்படையான மென்பொருள்களுள் இதுவும் ஒன்று.[1][2][3]

கிரியோ மென்பொருளால் உருவாக்கப்பட்ட சக்கர நாற்காலி

மேற்கோள்கள் தொகு

  1. "PTC History - PTC". Archived from the original on 2010-01-30. பார்க்கப்பட்ட நாள் 2009-12-15.
  2. "Creo Parametric Help Center".
  3. Horgan, Jack (2004-06-21). "EDA & PLM?". EDACafe.com Contributing Editor. பார்க்கப்பட்ட நாள் 2010-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரியோ_எலிமென்ட்ஸ்/புரோ&oldid=3890075" இலிருந்து மீள்விக்கப்பட்டது