கிருட்டிணா அதீசிங்
கிருட்டிணா நேரு அதீசிங் (Krishna Nehru Hutheesing) (2 நவம்பர் 1907 - 9 நவம்பர் 1967) இவர் ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். மேலும் இவர் ஜவகர்லால் நேருவின் இளைய சகோதரியும் [1] மற்றும் விஜயலட்சுமி பண்டிட் மற்றும் நேரு-காந்தி குடும்பத்தின் ஒரு பகுதி ஆவார்.
கிருட்டிணா அதீசிங் | |
---|---|
பிறப்பு | கிருட்டிணா நேரு 2 நவம்பர் 1907 மீர்கஞ்ச், அலகாபாத், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போது அலகாபாத், இந்தியா) |
இறப்பு | 9 நவம்பர் 1967 இலண்டன், ஐக்கிய இராச்சியம் | (அகவை 60)
தேசியம் | இந்தியன் |
பணி | எழுத்தாளர் |
பெற்றோர் | மோதிலால் நேரு (தந்தை) சொரூப ராணி நேரு (தாய்) |
வாழ்க்கைத் துணை | குணோட்டம் (ராஜா) அதீசிங் |
பிள்ளைகள் | கர்சா அதீசிங் அஜித் அதீசிங் |
உறவினர்கள் | காண்க நேரு-காந்தி குடும்பம் |
சுயசரிதை
தொகுகிருட்டிணா நேரு, இந்திய சுதந்திர ஆர்வலரும், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவருமான மோதிலால் நேரு மற்றும் சொரூப ராணி ஆகியோருக்கு அலகாபாத்தின் மிர்கஞ்சில் பிறந்தார், இவர் அதீசுசிங் சமண கோயிலைக்கட்டிய ஒரு முக்கிய அகமதாபாத் சமணக் குடும்பத்தைச் சேர்ந்த குணோட்டம் (ராஜா) அதீசிங் என்பவரை மணந்தார். [2] குணோட்டம் அதீசிங் 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் உயரடுக்கு சமூக வட்டாரங்களில் நன்கு அறியப்பட்டவர். [சான்று தேவை] [ மேற்கோள் தேவை ] 1950 களின் பிற்பகுதியில், இவர் நேருவின் விமர்சகரானார். 1959 இல், முன்னாள் தலைமை ஆளுநர் சி. ராஜகோபாலாச்சாரிக்கு ஆதரவளித்தார். சுதந்திராக் கட்சி என்ற ஒரு பழமைவாத சந்தை தாராளவாத அரசியல் கட்சியை உருவாக்கினார் . [3]
இவரும் இவரது கணவரும் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடி சிறையில் அதிக காலம் செலவிட்டனர். இவர்களுக்கு ஹர்ஷா அதீசிங் மற்றும் அஜித் அதீசிங்கை என்ற இரு மகன்கள இருந்தனர் ஒரு முன்னணி வால் ஸ்ட்ரீட் துணிகர முதலீட்டாளரான அஜித், 1996 இல் அமெரிக்க வயலின் கலைஞரான ஹெலன் ஆம்ஸ்ட்ராங்கை மணந்தார். இவர் 2006இல் இறந்தார்.
இந்திராவின் மூத்த மகன் ராஜீவ் காந்தி மும்பையில் உள்ள அதீசிங்கின் வீட்டில் பிறந்தார்.
மே 1958 இன் பிற்பகுதியில் கிருட்டிணா இசுரேலில் மூன்று நாட்கள் கழித்தார். 'இஸ்ரேல்-இந்தியா நட்பு அமைப்பு' என்ற ஒன்றை நிறுவிய இகல் அலோன் என்பவர் இவரை வரவேற்றார்.
திருமதி. அதீசிங் தனது வாழ்க்கையையும் தனது சகோதரர் ஜவகர்லால் மற்றும் தனது மருமகள் இந்திரா காந்தி ஆகியோரின் வாழ்க்கையையும் தொடர்ச்சியான புத்தகங்களில் வி நேரூஸ், வித் நோ ரெக்ரெட்ஸ், நேரூஸ் லெட்டர்ஸ் டு ஹிஸ் சிஸ்டர் அன்ட் டியர் டோ பிகோல்ட் உள்ளிட்ட தனிப்பட்ட நிகழ்வுகளுடன் வரலாற்றை பின்னிப்பிணைக்கும் புத்தகங்களில் ஆவணப்படுத்தியுள்ளார் .
இவரது கணவர் ராஜா அதீசிங்கும் புத்தகங்களை எழுதியுள்ளார்: தி கிரேட் பீஸ்: ஆன் ஏசியன்ஸ் கேண்டிட் ரிப்போர்ட் ஆன் ரெட் சீனா (1953), விண்டோ ஆன் சீனா (1953), மற்றும் திபெத் பைட் பார் பிரீடம் : த மார்ச் 1959 அப்ரைசிங் (1960). வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுடன் தொடர்புடை திருமதி. அதீசிங் பல பேச்சுக்களையும் வழங்கியுள்ளார். இவர் 1967 இல் இலண்டனில் இறந்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ Sister of Nehru Arrives For U.S. Lecture Tour த நியூயார்க் டைம்ஸ், 14 January 1947.
- ↑ Raja Hutheesingh might have..The Tiger Rider பரணிடப்பட்டது 2013-08-27 at the வந்தவழி இயந்திரம் Time, 19 May 1958.
- ↑ A Rise of Voices பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம் Time, 6 July 1959.