கிருஷ்ணகிரி நவநீத வேணுகோபால சுவாமி கோயில்

நவநீத வேணுகோபால சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருட்டிணகிரியில் புதுப்பேட்டை என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு கிருஷ்ணன் கோயிலாகும்.

அருள்மிகு நவநீத வேணுகோபால சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:கிருஷ்ணகிரி
சட்டமன்றத் தொகுதி:கிருஷ்ணகிரி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:நவநீத வேணுகோபாலன்
உற்சவர்:வேணுகோபாலன்
உற்சவர் தாயார்:ராதா, ருக்மணி

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் கிருஷ்ணகிரி நகரின் மையத்தில் நான்குபுறமும் வீதிகளோடு அமைந்துள்ளது. இக்கோயில் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை போன்றவற்றுடன் அமைந்துள்ளது. கருவறையில் உள்ள கிருஷ்ணன் குழந்தைவடிவ கிருஷ்ணனாக நான்கடி உயரத்தில் உள்ளார். வலது கையில் வெண்ணெய் உருண்டையுடனும், இடது கையில் மத்தையும் கொண்டு நின்ற கோலத்தில் உள்ளார்.[1]

வழிபாடு

தொகு

சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. நவராத்திரியில் உற்சவரான வேணுகோபாலர், இராதா, ருக்மணி ஆகியோருக்கு சிறப்பு பூசைகள் நடத்தப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசியன்று பரம்பத வாசல் திறப்பு சிறப்பாக நடக்கிறது.

அன்னதானம்

தொகு

இக்கோயிலில் தமிழக முதல்வரின் அன்னதான திட்டத்தின்படி நாள்தோறும் 25 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 60–62. {{cite book}}: Check date values in: |year= (help)

வெளி இணைப்புகள்

தொகு