கிரெகு செமென்சா
கிரெகு இலியனார்டு செமென்சா (Gregg Leonard Semenza, பிறப்பு சூலை 1, 1956) சான் ஆப்கின்சன் பல்கலைக்கழக மருத்துவக் களத்தில் பேராசிரியராக உள்ளார். குழந்தை மருத்துவம், புற்றுநோய்க்கான கதிர்வீச்சு மருத்துவம், உயிரிய வேதியியல் மருத்துவம், புற்ற்நோயியல் ஆகிய துறைகளுக்கான மைக்கேல் ஆர்ம்சிற்றாங்கு பேராசிரியர் பதவியில் இருக்கின்றார். உயிரணுப் பொறியியல் கழகத்தில் அரத்தக்குழாய் பற்றிய துறையின் இயக்குநராக இருக்கின்றார். [1] இவர் 2016 ஆண்டுக்கான அடிப்படை மருத்துவ ஆய்வுகளுக்கான இலசுக்கர் விருதை வென்றார்[2]. புற்றுநோய் உயிரணுக்கள் ஆக்சிசன் குறைவான சூழலிலும் இயங்கத் துணைபுரியும் HIF-1 என்னும் பொருளைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகின்றார். இவ்வாய்வுக்காக வில்லியம் கேலின், மற்றும் பீட்டர் இராட்கிளிஃபு ஆகிய இருவருடன் இவரும் 2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசை வென்றார். நோபல் பரிசானது உயிரணுக்கள் எவ்வாறு கிடைக்கும் ஆக்சிசன் அளவுக்கேற்ப தன்னை தவமைத்துக்கொள்ளுகின்றது என்பதைப் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக ("discoveries of how cells sense and adapt to oxygen availability") வழங்கப்பெற்றுள்ளது [3]
கிரெக் எல். செமென்சா Gregg L. Semenza | |
---|---|
பிறப்பு | சூலை 1, 1956 குயின்சு, நியூயார்க்கு நகரம் |
கல்வி கற்ற இடங்கள் |
|
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2019) |
விருதுகளும் பரிசுகளும்
தொகு- 2019, மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு
- 2016, இலசுக்கர் விருது
- 2014, வைலி பரிசு
- 2012, மருத்துவக் கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ "Gregg L. Semenza, M.D., Ph.D."
- ↑ Foundation, Lasker. "Oxygen sensing – an essential process for survival - The Lasker Foundation". The Lasker Foundation.
- ↑ "The 2019 Nobel Prize in Physiology or Medicine".