கிர்சனோவ் வினை

கிர்சனோவ் வினை (Kirsanov reaction) சிலவகையான கரிமபாசுபரசு சேர்மங்களை தொகுப்பு முறையில் தயாரிப்பதற்கு உதவும் வழிமுறையாகும். இவ்வினையில் ஒரு மூவிணைய பாசுபீன் ஒர் ஆலசனுடன் இணைந்து பின்னர் ஓர் அமீனுடன் சேர்ந்து இமினோபாசுபீன்களைக் கொடுக்கிறது. இவை பயனுள்ள ஈந்தணைவிகளாகவும், வினைப்பொருள்களாகவும் பயன்படுகின்றன[1]. டிரைபீனைல்பாசுபீன் உடன் புரோமின் வினைபுரிந்து புரோமோடிரைபீனைல்பாசுபோனியம் புரோமைடு உருவாகும் வினையில் குறிப்பாக இவ்வினை பயன்படுகிறது.

Ph3P + Br2 → Ph3PBr+Br.

களத்திலேயே இவ்வுப்பு ஆல்க்கைலமீன்களுடன் சேர்த்து சூடுபடுத்தப்பட்டு இமினோபாசுபோரேனைக் கொடுக்கிறது.

Ph3PBr+Br + 3 RNH2 → Ph3PNR + 2 RNH3+Br

வழக்கத்திலுள்ள சிடாவுடிங்கர் வினை பொருந்தாத இடங்களில், அதாவது இமினோபாசுபோரேன்கள் உருவாக்கத்திற்குத் தேவயான கரிம அசைடு கிடைக்காத நேரங்களில் இம்முறை பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆல்க்கைல் அமீன்களிலிருந்து இமினோபாசுபோரேன்களைத் தயாரிக்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது[2].

மேற்கோள்கள் தொகு

  1. Eguchi, Shoji; Matsushita, Yuji; Yamashita, Keizo (April 1992). "THE AZA-WITTIC REACTION IN HETEROCYCLIC SYNTHESIS. A REVIEW". Organic Preparations and Procedures International 24 (2): 209–243. doi:10.1080/00304949209355702. 
  2. Buchard, Antoine; Heuclin, Hadrien; Auffrant, Audrey; Le Goff, Xavier F.; Le Floch, Pascal (2009). "Coordination of tetradentate X2N2 (X = P, S, O) ligands to iron(ii) metal center and catalytic application in the transfer hydrogenation of ketones". Dalton Transactions (9): 1659. doi:10.1039/b816439h. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்சனோவ்_வினை&oldid=2747887" இலிருந்து மீள்விக்கப்பட்டது