கிறிஸ் எவன்ஸ்

(கிறிஸ் இவான்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிறிஸ்டோபர் ராபர்ட் எவன்ஸ் (ஆங்கில மொழி: Christopher Robert Evans) (பிறப்பு: ஜூன் 13, 1981)[1] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் கேப்டன் அமெரிக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகர் ஆனார்.

கிறிஸ் எவன்ஸ்
பிறப்புகிறிஸ்டோபர் ராபர்ட் எவன்ஸ்
சூன் 13, 1981 (1981-06-13) (அகவை 42)
பாஸ்டன், மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று வரை
உறவினர்கள்ஸ்காட் எவன்ஸ் (சகோதரன்)
மைக் கேப்னொ (மாமா)

இவர் 2000 ஆம் ஆண்டில் 'ஆப்போசிட் செக்ஸ்' என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 2001 இல் 'இன் நாட் அனதர்' உள்பட பல விடலைப்பருவ திரைப்படங்களில் தோன்றியதைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டில் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் மற்றும் 2007 இல் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 போன்ற படங்களில் 'கியூமன் டோர்சு' என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தில் நடித்தார்.

2011 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர், தி அவேஞ்சர்ஸ் (2012), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற படங்களில் கேப்டன் அமெரிக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை தொகு

கிறிஸ்டோபர் ராபர்ட் எவன்ஸ் ஜூன் 13, 1981 ஆம் ஆண்டில் பாஸ்டன் நகரில் பிறந்து[2] ஸட்பெரீ நகரில் வளர்ந்தார்[3]. இவரது தாயார் லிசா மேரி, கான்கார்ட் யூத் தியேட்டரில் ஒரு கலை இயக்குனர்[4][5] மற்றும் இவரது தந்தை ஜி ராபர்ட் பாப் எவன்ஸ் ஒரு பல் மருத்துவர்[6] ஆவார்கள். இவரது பெற்றோர்கள் 1999 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.

இவருக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் உண்டு. இவரது தாயார் அரை இத்தாலியர் மற்றும் அரை ஐரிஷ் வம்சாவளியை சேர்ந்தவர். இவர் சட்பெரீ ரீஜனல் உயர்நிலை பள்ளியில் பட்டம் பெற்றார். இவர் புத்த மதத்தைப் பின்பற்றுபர் என்பது குறிப்பிடத்தக்கது.[7]

தொழில் தொகு

இவர் 2000 ஆம் ஆண்டு தி நியூ கம்மர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகராக சினிமாதுறைக்கு அறிமுகமானார். ’நாட் அனதர் டீன் மூவி’ என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். அதை தொடர்ந்து தி பெர்ஃபெக்ட் ஸ்கோர், செல்லுலார், மற்றும் ஃபியர்ஸ் பீப்பிள் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். இவர் தனது இளம் வயதில் பல் தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு இவரது முதல் வரைகதை புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமான ஃபெண்டாஸ்டிக் ஃபோர் படத்தில் நடித்துளளார். இந்த திரைபபடமானது மார்வெல் வரைகதையில் இதே பெயரில் தோன்றிய வரை கதை குழுவில் ஒரு அங்கத்துவரான 'கியூமன் டோர்சு' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் தொடர்சியாக ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 2007 இல் வெளியானது.

அதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர், தி அவேஞ்சர்ஸ் (2012), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற படங்களில் கேப்டன் அமெரிக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள் தொகு

இவர் நடித்த திரைப்படங்கள் சில:

நிகழ்ப்பட விளையாட்டுகள் தொகு

விருதுகள் மற்றும் பரிந்துரைகள் தொகு

இவர் கேப்டன் அமெரிக்கா நடித்ததுக்கு பல பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். ஃபெண்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தி அவேஞ்சர்ஸ் திரைப்படங்களில் நடித்தற்காக விருதுகளை வென்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Today in History". The Guardian. அசோசியேட்டட் பிரெசு (London). June 13, 2009 இம் மூலத்தில் இருந்து December 26, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131226215444/http://www.theguardian.com/world/feedarticle/8556516. பார்த்த நாள்: January 23, 2008. "Actor Chris Evans is 28." 
  2. Itzkoff, Dave (July 8, 2011). "Chris Evans in 'Captain America: The First Avenger'". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2011/07/10/movies/chris-evans-in-captain-america-the-first-avenger.html. 
  3. America's Most Wanted. June 2011 இம் மூலத்தில் இருந்து ஜூலை 5, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5zxBHb81H?url=http://www.bostonmagazine.com/arts_entertainment/articles/americas_most_wanted_chris_evans_is_captain_america/. பார்த்த நாள்: April 16, 2013. 
  4. Marotta, Terry (July 19, 2007). "Grease is the word". Gatehouse News Service via Wicked Local Sudbury. Archived from the original on April 3, 2014. பார்க்கப்பட்ட நாள் July 19, 2010.
  5. Cantrell, Cindy (March 9, 2014). "Chris Evans doesn’t forget his Concord roots". The Boston Globe. http://www.bostonglobe.com/metro/regionals/west/2014/03/09/movie-superhero-chris-evans-doesn-forget-his-roots-concord-youth-theatre/rJ6PF3IYYmZZs9AbASfczO/story.html. பார்த்த நாள்: April 6, 2014. 
  6. Keck, William (September 9, 2004). "Chris Evans' career ready to sizzle". USA Today இம் மூலத்தில் இருந்து November 6, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131106192743/http://usatoday30.usatoday.com/life/people/2004-09-09-chris-evans_x.htm. பார்த்த நாள்: December 10, 2007. "...Evans' siblings, Scott, Carly and Shanna." 
  7. Sachs, Adam (May 2012). The Avengers' Chris Evans: Just Your Average Beer-Swilling, Babe-Loving Buddhist. http://www.details.com/celebrities-entertainment/cover-stars/201205/chris-evans-avengers. பார்த்த நாள்: April 16, 2013. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_எவன்ஸ்&oldid=3586644" இலிருந்து மீள்விக்கப்பட்டது