கிளிஞ்சல்கள்
கிளிஞ்சல்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கிளிஞ்சல்கள் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | துரை |
தயாரிப்பு | ஜி. இலலிதா சுனிதா சினி ஆர்ட்சு |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | மோகன் பூர்ணிமா ஜெயராம் |
வெளியீடு | திசம்பர் 25, 1981 |
நீளம் | 3826 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைக்களம்
தொகுஒரு இந்து சமயத்தைச் சார்ந்த இளைஞன் பாபு, கிறித்தவப் பெண்ணான ஜூலியைக் காதலிக்கிறார். ஆனால், சமய வேறுபாடு காரணமாக இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடும் எதிர்ப்பையும் மீறி, பாபு, ஜூலி இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறார்கள். ஜூலியின் தந்தை சுடீபன் அவரை ஒரு அறையில் பூட்டி வைக்கிறார். அதே நேரத்தில் பாபுவின் தந்தை மாணிக்கமும் அவரை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ஜூலி தற்கொலை செய்து கொள்கிறார். இதைக் கேட்ட பாபு சுடுகாட்டிற்கு விரைந்து சென்று ஜூலியின் உடலை தகனம் செய்யும் போதே இறந்து விடுகிறார்.
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்திருந்தார்.[1][2] "விழிகள் மேடையாம்" என்ற பாடல் ரேவதி இராகத்தில் அமைக்கப்பட்டது.[3]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"கிளை இல்லா மரங்களில் நிழல்" | பி. ஜெயச்சந்திரன் | 04:33 |
"விழிகள் மேடையாம் இமைகள்" | கல்யாண் டி. சுப்பிரமணியம், எஸ். ஜானகி | 04:37 |
"அழகினில் விளைந்தது மழையினில்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:31 |
"சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும்" | பி. சுசீலா | 04:17 |
வெளியீடும் வரவேற்பும்
தொகுஇத்திரைப்படம் 1981 திசம்பர் 25 அன்று திரைக்கு வந்தது.[4][5] கல்கி இதழின் விமர்சகர் நளினி இத்திரைப்படத்தின் கதை மிகவும் பழையது என்றும் காலத்திற்கேற்றதல்ல என்றும் விமர்சித்திருந்தார்.[6] இத்திரைப்படம் வசூல்ரீதியாக மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததோடு 175 நாள்கள் வெற்றிகரமாக ஓடியது.[7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kilinjalgal". Gaana. Archived from the original on 24 September 2021. பார்க்கப்பட்ட நாள் 24 September 2021.
- ↑ "Kilinjalgal Tamil Film EP vinyl Record by T.Rajendar". Mossymart. Archived from the original on 24 September 2021. பார்க்கப்பட்ட நாள் 24 September 2021.
- ↑ Charulatha Mani (15 February 2013). "Mystical Revathi". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201226101542/https://www.thehindu.com/features/friday-review/music/mystical-revathi/article4418462.ece.
- ↑ கண்ணன், சுரேஷ் (21 July 2020). "ரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோது பிரகாசித்தவர்... கதாநாயகனாக 'கிளிஞ்சல்கள்'ல் சாதித்த 'மைக்' மோகன்!". ஆனந்த விகடன். Archived from the original on 28 October 2021. பார்க்கப்பட்ட நாள் 28 October 2021.
- ↑ ராம்ஜி, வி. (1 January 2023). "'காதல் தோற்பதில்லை... காதலர்கள்தான் தோற்கிறார்கள்' என்று சொன்ன 'கிளிஞ்சல்கள்!'". Kamadenu. Archived from the original on 2 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2 January 2023.
- ↑ சாஸ்திரி, நளினி (17 January 1982). "கிளிஞ்சல்கள்". Kalki. p. 91. Archived from the original on 8 August 2022. பார்க்கப்பட்ட நாள் 8 August 2022.
- ↑ Kumar, S. Shiva (21 March 2019). "'Mike' Mohan: The unsung phenomenon". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201108001401/https://www.thehindu.com/entertainment/the-unsung-phenomenon/article26598463.ece.
- ↑ செல்வராஜ், என். (March 20, 2017). "வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்". Thinnai. Archived from the original on 28 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.