கிளை நிறுவனம்

தாய் நிறுவனத்தால் கட்டுப் படுத்தப் படும் நிறுவனம்.

கிளை நிறுவனம் அல்லது சேய் நிறுவனம் என்று அறியப்படும் நிறுவனம் வேறொரு நிறுவனத்தினால் கட்டுப்படுத்தப்படும் அல்லது சொந்தம் கொண்டாடப்படும் நிறுவனம் ஆகும். கட்டுப்படுத்தும் நிறுவனத்தை தாய் நிறுவனம் என்று அழைப்பர்.[1]

விவரங்கள்

தொகு

கிளை நிறுவனங்கள் வரி நிமித்தம் நிருவாக நிமித்தம் தனித்து இயங்குகின்றன. எனவே இத்தகைய நிறுவனங்களை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பிரிவு என்று சொல்லலாகாது. தாய் நிறுவனமும் கிளை நிறுவனமும் ஒரே தொழிலில்தான் ஈடுபடவேண்டும் அல்லது ஒரே இடத்தில் தான் செயல்பட வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் இல்லை. தாய் நிறுவனங்களில் நட்டம் ஏற்படும் போது கிளை நிறுவனங்களை இணைப்பது அல்லது விற்பது வாடிக்கை.[2]

தாய் நிறுவனங்கள் தங்களின் பங்குகள் மூலம் கிளை நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகின்றன. தாய் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுபவை கிளை நிறுவனங்களை விட பெரியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில சமயங்களில் கிளை நிறுவனங்கள், தாய் நிறுவனங்களைக் காட்டிலும் மதிப்புமிக்கதாய் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட தாய் நிறுவனம் பல்வேறு அடுக்குகளாக கிளை நிறுவனங்களை நிருவகிப்பதும் நடக்கும். இத்தகைய அடுக்குகள் முதல் அடுக்கு கிளை நிறுவனம் இரண்டாம் அடுக்கு கிளை நிறுவனம் என்று வரிசைப்படுத்தப் பட்டிருப்பன.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "இன்வெஸ்டோபீடியா - கிளை நிறுவனம்".
  2. "கிளை நிறுவனங்களில் சட்டம் - லீகல் டிக்ஷனரி".
  3. "அடுக்கப்பட்ட கிளை நிறுவனங்கள் - யூ எஸ் லீகல்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளை_நிறுவனம்&oldid=3143300" இலிருந்து மீள்விக்கப்பட்டது