கிழக்கு வாசல் (திரைப்படம்)

கிழக்கு வாசல் என்பது ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 1986ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் கார்த்திக், ரேவதி, குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிறந்த வெற்றிப்படமான இது சென்னையில் 150 நாட்களைக் கடந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளில் 100 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடியது. நடிகர் கார்த்திக் தமிழ்த் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ள இப்படமே ஒரு திருப்புமுனையாக அமைந்தது.[1]

கிழக்கு வாசல்
ஒலித்தட்டு அட்டைப்படம்
இயக்கம்ஆர். வி. உதயகுமார்
தயாரிப்புடி. ஜி. தியாகராஜன்
ஜி. சரவணன்
கதைஎம். எஸ். மாது
திரைக்கதைஆர். வி. உதயகுமார்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
ரேவதி
குஷ்பூ
சின்னி ஜெயந்த்
மனோரமா
விஜயகுமார்
ஜனகராஜ்
ஒளிப்பதிவுஅப்துல் ரகுமான்
படத்தொகுப்புஜி. ஆர். அணில் மல்நாட்
கலையகம்சத்ய ஜோதி பிலிம்சு
விநியோகம்சத்ய ஜோதி பிலிம்சு
வெளியீடுசூலை 13, 1986
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மீளுருவாக்கங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் இயக்குநர்
1992 மேரே சஜான சாத் நிபானா இந்தி மிதுன் சக்கரவர்த்தி ராஜேஷ் வாகில்
1992 சிந்துறா திலகா கன்னடம் சுனில், மாலாஸ்ரீ, சுருதி சாய் பிரகாஷ்
1995 சிலகபச்சா காபுறம் தெலுங்கு ஜகபதி பாபு, மீனா, சௌந்தர்யா கோடி ராமகிருஷ்ணா

பாடல்கள் தொகு

இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டவை. ரேவதி தோன்றும் பாடலான வந்ததே ஓ குங்குமம் பாடல் மோகன ராகத்தில் உருவானதாகும். இப்பாடலை பாடிய புகழ்பெற்ற பாடகி சித்ரா சிறந்த பின்னணிப் பாடகிக்கான தமிழக அரசின் திரைப்பட விருதைப் பெற்றார்.

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
1 "அட வீட்டுக்கு வீட்டுக்கு" இளையராஜா வாலி
2 "பச்சைமலை பூவு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஆர். வி. உதயகுமார்
3 "தலுக்கி தலுக்கி" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
4 "பாடிப் பறந்தகிளி" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
5 "வந்ததே குங்குமம்" சித்ரா

மேற்கோள்கள் தொகு

  1. "A story to tell". The Hindu. 2007-10-22. Archived from the original on 2010-12-19. https://web.archive.org/web/20101219150300/http://www.hindu.com/mp/2007/10/22/stories/2007102250440200.htm. பார்த்த நாள்: 2015-03-13. 

வெளி இணைப்புகள் தொகு