கி. கிருஷ்ணமூர்த்தி

கிருஷ்ணசாமி கிருஷ்ணமூர்த்தி (சூலை 1, 1944 - சனவரி 16, 2019) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

கி. கிருஷ்ணமூர்த்தி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
முன்னவர் பி. வி. ராஜேந்திரன்
பின்வந்தவர் மணிசங்கர் அய்யர்
தொகுதி மயிலாடுதுறை
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 1, 1944(1944-07-01)
கும்பகோணம், இந்தியா
இறப்பு சனவரி 16, 2019(2019-01-16) (அகவை 74)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி தமிழ் மாநில காங்கிரசு
தொழில் வழக்கறிஞர்
சமயம் இந்து

வாழ்க்கை வரலாறு தொகு

இவர் சூலை 1, 1944 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கிருஷ்ணசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். கும்பகோணம் அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த இவர், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.

அரசியல் தொகு

இவா் 1984 முதல் 1988 வரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக பணியாற்றினார். 1998 இல், மயிலாடுதுறை மக்களவை தொகுதியிலிருந்து, தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார்.

குடும்பம் தொகு

இவா் மல்லிகா என்பவரை செப்டம்பர் 8, 1975 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஆதாரங்கள் தொகு

  1. "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". Parliament of India. 18 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._கிருஷ்ணமூர்த்தி&oldid=3480478" இருந்து மீள்விக்கப்பட்டது