கீர்த்திப்பூர் போர்

கீர்த்திபூர் போர் (Battle of Kirtipur) நேபாளத்தை கோர்க்கள் கைப்பற்றிய போது நிகழ்ந்த ஒரு போர் ஆகும். காத்மாண்டு சமவெளியின் ஒரு முதன்மை நகரமான கீர்த்திப்பூரில் இப்போர் 1767 ஆம் ஆண்டு நடைபெற்றது. கீர்த்திப்பூர் அப்போது லலித்பூர், நேவார் இராச்சியத்தின் ஒரு அங்கமாக இருந்தது. மதில்சுவரால் சூழப்பட்ட 800 வீடுகள் கொண்ட ஒரு நகரமாக உயர்ந்த மேல்பகுதியில் விரிந்திருந்தது[1]

கீர்த்திப்பூர் போர்
கோர்க்காலிகள் நேப்பாளத்தைக் கைப்பற்றுதல் பகுதி

கீர்த்திப்பூர் போரில் பாக் பைரவா கோயில் மீதுள்ள ஆயுதங்கள்
நாள் 1767
இடம் கீர்த்திபூர்
கோர்க்காலிகள் வெற்றி
பிரிவினர்
நேவார்கள் கோர்க்கர்கள்
தளபதிகள், தலைவர்கள்
தனுவந்தர் கலு பாண்டே
சுருபரட்னா
பலம்
தெரியவில்லை தெரியவில்லை
கீர்த்திப்பூர் போர் is located in நேபாளம்
Gorkha
Gorkha
Kirtipur
Kirtipur
தற்கால நேப்பாளத்தில் அமைவிடம்
கர்னல் கிர்க்பாட்ரிக்கு 1793 இல் நேப்பாளத்திற்கு வருகை தந்தபோது போரில் மூக்கறுபட்ட வீரர்களைச் சந்தித்தார்.
கீர்த்திப்பூருக்குள் கோர்க்காலிகள் உட்புகுந்த நுழைவு வாயில்
இமயமலை பின்னணியில் கீர்த்திப்பூர்

காத்மாண்டு சமவெளியின் நேவார் படைகளுக்கும், முற்றுகையிட்டிருந்த கோர்க்கா படையினரருக்கும் இடையில் இப்போர் நடைபெற்றது. நாடு பிடிக்கும் ஆசையில் ஷா வம்சத்தை நிறுவிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா தொடங்கிய போரில் கீர்த்திப்பூர் போர் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று கோர்க்காலிகள் குறிப்பிட்டனர். நேவார்களின் ஆட்சி முடிவுக்கு வருவதற்கும், [2][3] காட்மாண்டு பள்ளத்தாக்கும் அதனுடன் இணைந்த பிற பகுதிகள் முழுவதும் பிரிதிவி நாராயணன் ஷாவின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கும் இப்போரில் அடைந்த வெற்றி ஒரு முக்கிய காரணமாகும்.[4]

போர் காட்சிகள் தொகு

கீர்த்திப்பூர் போர் ஒழுக்கச்சீர்கேடான கொடுமை நிறைந்த ஒரு போராகக் கருதப்படுகிறது. வெற்றி பெற்ற சாவின் படையினர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி போரிட்ட நேவார் நகரவாசிகளின் மூக்கு மற்றும் உதடுகளை துண்டித்து வெறியாட்டம் போட்டனர்[5]

கீர்த்திப்புரில் நடபெற்ற போர் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரோடு இருந்த மக்களின் முகங்கள் மூக்கும் பற்களும் சிதைக்கப்பட்டு மண்டையோடுகள் போல காட்சியளித்ததாகவும் இத்தாலிய கப்புச்சின் சபையைச் சேர்ந்த, ஓர் அருட்தந்தையான கியுசெப்பி கருத்துத் தெரிவித்திருக்கிறார்"[6][7].

பிரித்தானிய இந்தியாவின் கவர்னர் செனரலான சார்லசு கார்ன்வாலிசுவின் தூதர் கர்னல் கிர்க்பாட்ரிக்கும் இப்போரைக் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். போர் முடிந்த 26 ஆண்டுகளுக்கு பின்னர் 1793 ஆம் ஆண்டு அவர் காட்மாண்டுவிற்கு வருகைதந்த போது, மூக்கிழந்த மனிதர்களைக் கண்டு தன்னுடைய அனுபவங்களை எழுதியிருக்கிறார்[8].

எங்கள் பெட்டிப் படுக்கைகளை மலை உச்சிக்கு கொண்டு வந்த சுமை தூக்குபவர்களில் பலர் மூக்கில்லாமல் இருந்ததை கவனித்தன் விளைவாக இந்த உண்மையை அறிந்துகொள்ள நேரிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். அந்தச்சூழலில் தனித்துத் தெரிந்த அவர்களின் முகந்தான் மேற்கொண்டு அவர்களை விசாரிப்பதற்கான காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அக்காலத்தில், திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள் மற்றும் நடத்தைக் கெட்டவர்கள் போன்றவர்களுக்குத்தான், மூக்கு, காது துண்டித்தல் ஒரு தண்டனையாக வழங்குவது நேபாள சமூகத்தில் வழக்கமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

865[9] நபர்கள் இவ்வாறு மூக்கறுபட்டிருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கசர்கள், மகர்கள், தமாங்கர்கள், கிழக்கு பீகாரைச் சேர்ந்த திராகுட்டியர்கள், உள்ளுர் நேவாரிகள் போன்றவர்களும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தது ஓர் ஆச்சரியமூட்டும் தகவலாகும். செயந்த ராணா, பரசுராம் தபா, சகோதரர் தயாராம் தபா போன்றவர்கள் பள்ளத்தாக்குப் படையின் முன்னணி தளபதிகளாக இருந்துள்ளனர்.

முற்றுகை தொகு

காட்மாண்டு நகரத்தின் வளமான பண்பாடு, வர்த்தகம், தொழில் மற்றும் விவசாயம் ஆகியனவற்றின் மீது கொண்ட ஆசையே காட்மாண்டு பள்ளத்தாக்கை கோர்க்காலிகள் விரும்பியதற்குக் காரணமாகும்[10] . 1736 ஆம் ஆண்டில் கோர்க்காலி மன்னர் நாரா பூபால் சா, காட்மாண்டு பள்ளத்தாக்கின் வடமேற்கில் ஒரு கோட்டையாகவும் எல்லை நகரமாகவும் திகழ்ந்த நுவாகோட் மீது ஒரு தாக்குதலை தொடுத்தார். ஆனால் அத்தாக்குதல் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது[11].

அவரது மகன் பிரிதிவி நாராயண் சா 1742 இல் மன்னராக முடிசூடிக் கொண்ட பிறகு மீண்டும் இத்தாக்குதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. பலமான போரால் மட்டும் காட்மாண்டுவை வெற்றி கொள்ள முடியாது என்பதை பிரிதிவி உறுதியாக நம்பினார். முக்கியமான மற்றும் வர்த்தகம் நிகழ்ந்த பாதைகளைக் கைப்பற்றினால் மட்டுமே காட்மாண்டுவைப் பிடிக்க இயலும் என்றும் கருதினார்[12][13]. அவருடைய படைகள் காட்மாண்டுவைச் சுற்றியுள்ள மலைப் பாதைகளை ஆக்ரமித்தன. திபெத் மற்றும் இந்தியாவை இணைக்கும் வர்த்தகப் பாதைகள் முடக்கப்பட்டன.

1744 ஆம் ஆண்டில் பிரிதிவி நுவாகோட் நகரைப் பிடித்து நேபாளத்திற்குள் காலடி வைத்தார். இவ்வெற்றியால் இமயமலைத்தொடரில் அமைந்திருந்த வர்த்தக சாலைகளில் நடைபெற்ற நேபாளத்தின் வியாபார நடவடிக்கைகளைத் தடுத்தார். படிப்படியாக காட்மாண்டு பள்ளத்தாக்கின் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் [14]சுற்றிலுமிருந்த மாக்வான்பூர், துலிக்கேல் பகுதிகளை[15] 1762 மற்றும் 1763 ஆம் ஆண்டுகளில் கோர்க்காலிகள் பிடித்தனர்.

நாட்டில் பஞ்சம் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக இவர் பள்ளத்தாக்கில் முற்றுகை அமைந்தது. தானியங்கள் எதுவும் பள்ளத்தாக்கிற்குள் செல்ல முடியாதபடி தடுத்தார். தப்பியோடியவர்களைப் பிடித்து சாலையோர மரங்களில் தூக்கிலிட்டனர். தொடர்ச்சியாக நடைபெற்ற இத்தகைய முற்றுகைகளால், கோர்க்காலிகளை சமாளிக்க அரசர் மல்லா பிரித்தானியாவின் கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியை நாடினார்[16] . ஆகத்து மாதம் 1767 ஆம் ஆண்டில் தளபதி சியார்ச்சு கின்லோச்சு முற்றுகைகளால் நொந்து போயிருந்த குடிமக்களைக் காப்பாற்ற காட்மாண்டு நோக்கி ஒரு பிரித்தானியப் படையுடன் வந்தார். அவர் காட்மாண்டுவிற்குள் 75 கி.மீ தொலைவு வரை வந்த அவர் சிந்துலி, அரிகர்பூர் கோட்டைகளைக் கைப்பற்றினார்[17]. ஆனால் சர்தார் பன்சு குருங்கின் நீடித்த இரண்டு எதிர்தாக்குதல்களால் பிரித்தானியப் படை பின்வாங்கியது[18].

முதல் தாக்குதல் தொகு

காட்மாண்டு பள்ளத்தாக்கின் மேற்கில் இருக்கும் தாகாசோக் என்ற மலைக்கிராமத்தில் தளம் அமைத்துக் கொண்ட கோர்க்காலிகள் அங்கிருந்து கீர்த்திப்புரின் மீது தங்களது முதலாவது தாக்குதலை நிகழ்த்தினர். அவர்களிடம் வாள், வில், அம்பு மற்றும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருந்தன[19].

1757-ம் ஆண்டில் நிகழ்ந்த முதல் தாக்குதலின்போது கோர்க்காலி படையினர் மோசமாக தாக்கப்பட்டனர். அவர்கள் கீர்த்திப்பூரை நோக்கி முன்னேறி வந்தபோது நேவார்கள் காயி தனுவந்தர் தலைமையின் கீழ் அவர்களைச் சந்தித்தனர், இரு படைகளும் கீர்த்திப்பூருக்கு வடமேற்கில் தியாங்லா பாண்டு சமவெளியில் போரிட்டனர். மூர்க்கமாகப் போரிட்ட நேவார்கள் தங்கள் நகரத்தைப் பாதுகாத்துக் கொண்டனர். கோர்க்காலிப் படையினரின் தளபதி களு பாண்டே கொல்லப்பட்டார், கோர்க்காலி அரசர் ஒரு துறவி போல வேடமிட்டு, சுற்றியுள்ள மலைகளுக்குள் ஓடி உயிர் தப்பினார்[20][21]

இரண்டாவது தாக்குதல் தொகு

படையெடுத்தல் மூலமாக கீர்த்திப்பூரை கைப்பற்ற இயலாது என்பதை உணர்ந்த சா அந்நாட்டு மக்களுக்கு பஞ்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் வெற்றி கொள்ளலாம் என நினைத்தார். நகரத்திற்கு வெளியே முற்றுகையிட்ட இவர் உப்பு பருத்தி முதலானவற்றை நகருக்குள் செல்லவிடாமல் தடுத்தார்[22]. கொண்டு வந்தவர்களை வஞ்சகமாக பிடித்து கொன்றார்.

1764 இல் சா இரண்டாவது முறையாக கீர்த்திப்பூரின் மீது தாக்குதல் நிகழ்த்தினார். சுர்பிரதாப் தலைமையில் இவர்கள் இரவு நேரத்தில் கீர்த்திப்பூரின் மீது தாக்குதலை தொடங்கினர். இம்முறையும் கீர்த்திப்பூரின் மக்கள் சுவர்களுக்குப் பின்னால் நின்று கல்மழை எறிந்து கோர்க்காக்களை தோற்கடித்தனர். சர்பிரதாப்பின் கண்ணில் அம்பு பாய்ந்து அவர் கண்ணை இழந்தார்.

மூன்றாவது தாக்குதல் தொகு

மூன்றாவது முறையாக கீர்த்திப்புரின் மேல் தாக்குதல் நிகழ்த்த 1767 இல், கோர்க்காலி அரசன் சர்பிரதாப்பின் தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக மூன்று நேப்பாள மன்னர்களும் ஒன்றாக இணைந்து தங்கள் படைகளை கீர்த்திப்பூருக்கு அனுப்பி வைத்தனர். இவர்களின் படை உரிய நேரத்தில் கீர்த்திப்பூருக்கு வருவதற்குள் இலலித்பூரின் தனுவந்தா கோர்க்காலிகளுடன் சேர்ந்த காரணத்தால் அவர்கள் நகருக்குள் நுழைந்தனர்[23][24]

உள்ளுர் படையினர் மேலும் போராட வாய்ப்பு இருந்தும் அவர்கள் போரை நிறுத்தி விட்டு கோர்க்காலிகளிடம் சரணடைந்தனர். ஒரு நீண்ட முற்றுகையால் அவர்கள் தளர்ந்து போயிருந்ததும், கோர்க்காலி மன்னன் பொது மன்னிப்பு அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியும் இதற்குக் காரணமாகும். இரண்டு நாட்களுக்குப் பின்னர் போரினால் ஏற்பட்ட இழப்புகளைக் மதிப்பிட்ட சா, நகரத்து உள்ளூர் வீரர்களின் மூக்குகளையும் உதடுகளையும் துண்டிக்கவும் அவர்களைக் கொல்லவும் உத்தரவிட்டான்.

கீர்த்திப்பூர் போர் வெற்றியானது, வளமான காட்மாண்டு பள்ளத்தாக்கை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட இருபதாண்டு கால முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இவ்வெற்றியைத் தொடர்ந்து சா காட்மாண்டு, இலலித்பூர், நகரங்களை 1768 ஆம் ஆண்டிலும், பக்தபூரை 1769 ஆம் ஆண்டிலும் கைப்பற்றினார். மல்ல வம்சத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, சா வம்சத்தின் ஆட்சி தொடங்கியது[25] [26].

கீர்த்திப்பூர் போரின் முடிவில் நேபாள இராச்சியம் உருவானது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Giuseppe, Father (1799). "Account of the Kingdom of Nepal". Asiatick Researches. London: Vernor and Hood. பார்க்கப்பட்ட நாள் 18 October 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help) Page 308.
  2. Kirkpatrick, Colonel (1811). An Account of the Kingdom of Nepaul. London: William Miller. https://books.google.com/books?id=ijxAAAAAYAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 16 October 2012.  Pages 381-385.
  3. Giuseppe, Father (1799). "Account of the Kingdom of Nepal". Asiatick Researches. London: Vernor and Hood. பார்க்கப்பட்ட நாள் 16 October 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help) Pages 316-319.
  4. Waller, Derek J. (2004). The Pundits: British Exploration Of Tibet And Central Asia. University Press of Kentucky. பக். 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8131-9100-3. 
  5. Wright, Daniel (1990). History of Nepal. New Delhi: Asian Educational Services. https://archive.org/stream/HistoryOfNepal/HistoryOfNepaldanielWright#page/n39/mode/2up. பார்த்த நாள்: 16 October 2012.  Pages 18-19.
  6. Giuseppe, Father (1799). "Account of the Kingdom of Nepal". Asiatick Researches. London: Vernor and Hood. பார்க்கப்பட்ட நாள் 18 October 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help) Page 319.
  7. "A Brief History of the Catholic Church in Nepal". Apostolic Nunciature, India. 2004. Archived from the original on 5 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 December 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  8. Kirkpatrick, Colonel (1811). An Account of the Kingdom of Nepaul. London: William Miller. https://books.google.com/books?id=ijxAAAAAYAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 16 October 2012.  Page 164.
  9. Wright, Daniel (1990). History of Nepal. New Delhi: Asian Educational Services. https://archive.org/stream/HistoryOfNepal/HistoryOfNepaldanielWright#page/n301/mode/2up. பார்த்த நாள்: 16 October 2012.  Page 259.
  10. Raj, Yogesh (2012). "Introduction". Expedition to Nepal Valley: The Journal of Captain Kinloch (August 26-October 17, 1767). Kathmandu: Jagadamba Prakashan. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9937-85180-0. 
  11. Northey, William Brook and Morris, Charles John (1928). The Gurkhas: Nepal-Their Manners, Customs and Country. Asian Educational Services. ISBN 978-81-2061577-9. Pages 30-31.
  12. Stiller, Ludwig F. (1968). Prithwinarayan Shah in the light of Dibya Upadesh. Catholic Press. பக். 39. 
  13. Singh, Nagendra Kr (1997). Nepal: Refugee to Ruler: A Militant Race of Nepal. APH Publishing. பக். 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7024847-7. https://books.google.com/books?id=Aaog6bnQlNYC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false. பார்த்த நாள்: November 7, 2012. 
  14. Raj, Yogesh (2012). "Introduction". Expedition to Nepal Valley: The Journal of Captain Kinloch (August 26-October 17, 1767). Kathmandu: Jagadamba Prakashan. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9937-85180-0. 
  15. Singh, Nagendra Kr (1997). Nepal: Refugee to Ruler: A Militant Race of Nepal. APH Publishing. பக். 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7024847-7. https://books.google.com/books?id=Aaog6bnQlNYC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false. பார்த்த நாள்: November 7, 2012. 
  16. Giuseppe, Father (1799). Account of the Kingdom of Nepal. London: Vernor and Hood. பக். 317. https://books.google.com/books?id=vSsoAAAAYAAJ&pg=PA307&cad=4#v=onepage&q&f=false. பார்த்த நாள்: November 7, 2012. 
  17. Chatterji, Nandalal (1939). "The First English Expedition to Nepal". Verelst's Rule in India. Indian Press. பக். 21. https://books.google.com/books/about/Verelst_s_Rule_in_India.html?id=oW4BAAAAMAAJ&redir_esc=y. பார்த்த நாள்: 14 November 2013. 
  18. Raj, Yogesh (2012). "Introduction". Expedition to Nepal Valley: The Journal of Captain Kinloch (August 26-October 17, 1767). Kathmandu: Jagadamba Prakashan. பக். 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789937851800. 
  19. Vansittart, Eden (1896). Notes on Nepal. Asian Educational Services. ISBN 978-81-206-0774-3. Page 34.
  20. Majupuria, Trilok Chandra (March 2011). "Kirtipur: The Ancient Town on the Hill". Nepal Traveller இம் மூலத்தில் இருந்து 17 நவம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151117014432/http://www.nepal-traveller.com/index.php?action=articledetail&id=259. பார்த்த நாள்: 18 October 2012. 
  21. Wright, Daniel (1990). History of Nepal. New Delhi: Asian Educational Services. https://archive.org/stream/HistoryOfNepal/HistoryOfNepaldanielWright#page/n269/mode/2up. பார்த்த நாள்: 7 November 2012.  Page 227.
  22. Raj, Yogesh (2012). Expedition to Nepal Valley: The Journal of Captain Kinloch (August 26-October 17, 1767). Kathmandu: Jagadamba Prakashan. ISBN 978-9937-85180-0.
  23. Kirkpatrick, Colonel (1811). An Account of the Kingdom of Nepaul. London: William Miller. https://books.google.com/books?id=ijxAAAAAYAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 17 October 2012.  Pages 382-386.
  24. "The city of good deeds". Nepali Times. 24–30 November 2000. http://nepalitimes.com/issue/18/Culture/9018. பார்த்த நாள்: 18 October 2012. 
  25. Kirkpatrick, Colonel (1811). An Account of the Kingdom of Nepaul. London: William Miller. https://books.google.com/books?id=ijxAAAAAYAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 17 October 2012.  Pages 382-386.
  26. "Nepal's Gorkha kingdom falls". The Times of India. 2 June 2008 இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411033226/http://articles.timesofindia.indiatimes.com/2008-06-02/rest-of-world/27770497_1_narayanhity-dipendra-prithvi-narayan-shah. பார்த்த நாள்: 11 February 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்திப்பூர்_போர்&oldid=3549979" இலிருந்து மீள்விக்கப்பட்டது