கீழ்க்கட்டளை

கீழ்க்கட்டளை (Keelkattalai) தென்சென்னையின் புறநகர்ப் பகுதியில் பல்லாவர நகராட்சிக்கும்[1], செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்டதாக உள்ளது. இந்தப் பகுதியில் நடுத்தர மக்களே அதிகம் வாழ்கின்றனர்.

புள்ளிவிவரங்கள்தொகு

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி கீழ்க்கட்டளையின் மக்கள் தொகை 27,981 ஆகும் [2]

மக்கள் தொகை தரவு
ஆண்டு மக்கள் தொகை ஆண் பெண்
2001[3] 17,440 9,243 8,197
2011[2] 27,981 14,027 13,954

போக்குவரத்து வசதிதொகு

மக்களே அதிகம் வாழ்கின்றனர், மிகப்பெரிய பேருந்து நிலையம் ஒன்று இங்கு உள்ளது. இங்கிருந்து பல்வேறு உர்களுக்கு பேருந்துகள் செல்கின்றன. முக்கியமாக தியாகராய நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர் போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்து பல பேருந்துகள் செல்கின்றன. மருத்துவமனைகள், உணவகங்கள், ஆடையகங்கள், பழக்கடைகள். பூக்கடைகள், பல் பொருள் அங்காடிகள் போன்றவைகள் இங்குள்ளன. இரயில் மார்க்கமாக வருபவர்கள் பரங்கிமலை இரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து எம்14, எம்11 போன்ற பேருந்துகளைப் பிடித்து அந்த இடத்திற்குச் செல்லலாம்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்க்கட்டளை&oldid=3240488" இருந்து மீள்விக்கப்பட்டது