கீ. தாமோதரன்

இந்திய அரசியல்வாதி, எழுத்தாளர்

கீழேதத்து தாமோதரன் (Keezhedathu Damodaran)[1](பிப்ரவரி 25,1912-ஜூலை 3,1976) ஓர் மார்க்சியக் கோட்பாட்டாளரும், எழுத்தாளருமாவார். இவர் இந்திய மாநிலமான கேரளாவில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும் , மலையாளத்தில் முதல் முற்போக்கான எழுத்தாளராகவும் இருந்தார். மேலும் இவர் ஒரு பன்மொழி அறிஞரும் ஆவார். அரசியல் ஆர்வலரும் மற்றும் ஆவணப்பட இயக்குனருமான கே. பி. சசி தாமோதரனின் மகன் ஆவார்.

கீ. தாமோதரன்
K Damodaran
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1964–1970
தொகுதிகேரளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1912-02-05)5 பெப்ரவரி 1912
இறப்பு3 சூலை 1976(1976-07-03) (அகவை 64)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வேலைபொதுவுடைமைச் சித்தாந்தம், எழுத்தாளர் & அரசியல்வாதி

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

தாமோதரன், கிழக்கினியாகத் துப்பன் நம்பூதிரி மற்றும் கீழேதத்து நாராயணி அம்மா ஆகியோருக்கு மலப்புறம் மாவட்டம் பொன்னானியில் பிறந்தார். திரூர் அரசு பள்ளியில் பள்ளிப்படிப்பையும், கோழிக்கோடு சாமுத்திரி கல்லூரியில் கல்லூரிக் கல்வியையும் பெற்றார். இவரது முதல் சோசலிச நடவடிக்கைகள் ‘கேரள மாணவர் இயக்கத்தின்’ அதன் செயலாளராக தொடங்கியது. இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக 1931 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு 23 மாதங்கள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். கோயம்புத்தூர் சிறையில் இருந்தபோது, இவர் தமிழ் மற்றும் இந்தி மொழிகளைக் கற்றுக்கொண்டார். 1935 ஆம் ஆண்டில் வாரணாசி சென்று அங்குள்ள விஸ்வ வித்யாலயா கல்வி நிலையத்தில் சமசுகிருதம் பயின்று சாஸ்திரி தேர்வில் தேர்ச்சி பெற்றார். வாரணாசியில் இருந்தபோது உருது மற்றும் வங்காள மொழி ஆகியவற்றையும் கற்றுக் கொண்டார். பின்னர் பொதுவுடைமை சித்தாந்தத்தின் மீது ஈர்க்கப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

லால் பகதூர் சாஸ்திரி இவரது வகுப்புத் தோழராக இருந்தார். தாமோதரன் ஓங்கார் நடசாஸ்திரி என்பவர் மூலம் பொதுவுடைமை சித்தாந்தத்திற்கு ஈர்க்கப்பட்டார். 1937இல் கேரளாவுக்குத் திரும்பிய இவர், கேரள சோசலிசக் கட்சியில் சேர்ந்தார். அதே ஆண்டு மே மாதம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் கேரளப் பிரிவை உருவாக்கினார். கயிறு மற்றும் பீடி தொழிலாளர்களை ஒழுங்கமைத்தார். இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டு 1945 இல் விடுவிக்கப்பட்டார். 1951இல், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மலபார் பிரிவுக் குழுவின் வட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும், 1957ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டார். 1960இல் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு தாமோதரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவயுகம் வார இதழின் தொகுப்பாளராகவும் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதுவதன் மூலமும், புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதன் மூலமும், பல்வேறு மன்றங்களில் விவாதித்து வருவதன் மூலமும் தாமோதரன் அறிவார்ந்த செயல்பாட்டில் தீவிரமாக இருந்தார்.

1964இல் மாநிலங்களவை உறுப்பினராக ஆனார். கிட்டத்தட்ட அனைத்து பொதுவுடைமை நாடுகள் உட்பட பல ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தாமோதரன் பயணம் செய்தார். பதவிக் காலத்திற்குப் பிறகு, இவர் தனது நேரத்தை கட்சியின் வரலாறு குறித்த விரிவான ஆராய்ச்சியை இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் கூட்டுறவின் கீழ் முடித்தார். இவரது பட்டாபக்கி என்ற நாடகம் கேரளாவில் அரங்கேற்றப்பட்ட முதல் அரசியல் நாடகமாகும். இது ஒரு வகையில், சாமானிய மக்களிடையே பொதுவுடைமை சித்தாந்தத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. அதுவரை ஆன்மீகமாக மட்டுமே கருதப்பட்ட இந்திய தத்துவத்தில் தாமோதரன் ஆழமாக வாழ்ந்து, அதில் புதிய பௌதிக எண்ணங்களைக் கண்டுபிடித்தார்.

இறப்பு

தொகு

தாமோதரன் 1976 ஜூலை 3 அன்று புது தில்லி,சப்தர்ஜங் மருத்துவமனையில் இறந்தார். தாமோதரன் ஒரு பன்மொழி அறிஞராக இருந்தார். மேலும் பல புத்தகங்களை உருசிய மொழியிலிருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்த்தார். பட்டாபக்கி , இரக்தாபனம் போன்ற நாடகங்களையும் எழுதினார். 1934க்கும் 1935க்கும் இடையில் எழுதப்பட்ட கதைகள் இப்போது ‘கன்னூனீர்’ என்ற தொகுப்பாக உள்ளன. இவரது அனைத்து படைப்புகளிலும், கட்சி பிரபலமடைந்தது. இந்திய கலாச்சாரம் மற்றும் பண்டைய காலத்தின் தத்துவம் ஆகியவற்றின் சிறந்த விளக்கமான இண்டியுடே ஆத்மாவு இவரது படைப்புகளில் மிகவும் பிரபலமானவை ஆகும். தொல்லியல், மானுடவியல் மற்றும் நாணய அறிவியல் ஆகியவற்றின் அடிப்படையில் கேரள வரலாறு முதல் பகுதியை தாமோதரன் முடித்தார்.

மேற்கோள்கள்

தொகு

பிற ஆதாரங்கள்

தொகு
  • Grandhalokam Monthly (Trivandrum: Kerala State Library Council). November 2004. 
  • Quilon? (15 July 1990). Janayugom Weekly. 
  • Rasheed, M. (1982). K. Damodaran. Kottayam: D.C. Books.
  • Sasi, K. P. (17 March 2012). "K Damodaran: An Unfinished Chapter". Countercurrents.org.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கீ._தாமோதரன்&oldid=4079098" இலிருந்து மீள்விக்கப்பட்டது