குகமால் தேசியப் பூங்கா
குகமால் தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Gugamal National Park) இந்தியாவின் மஹாராஸ்டிரம் மாநிலத்தில் அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது 1974 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு 1673.93 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் மெல்காட் புலிகள் பாதுகாப்புத் திட்டமும் செயல்பட்டு வருகிறது. இங்கு புலிகள், சிறுத்தைகள், நரிகள், மான்கள் போன்றவை மிகுதியாகக் காணப்படுகின்றன. இங்கு 25 வகையான மீன்களும், பல்வேறு வகையான வண்ணத்துப் பூச்சி களும் உள்ளன. இந்தப் பூங்காவிலுள்ள ஆறுகளில் 1990 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதங்களில் முதலைகள் விடப்பட்டன. இந்த தேசியப் பூங்காவினுள் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் உள்ளன.
வெளி இணைப்புகள்
தொகு- பூங்காவைப் பற்றிய தகவல்
- குகமால் தேசியப் பூங்கா பரணிடப்பட்டது 2015-12-22 at the வந்தவழி இயந்திரம்