குசேவின் பொதுவான அட்டவணை
குசேவின் பொதுவான அட்டவணை (Gusev's Tables) என்பது தொழில்துறையில் காப்பரண்களின் தடிமனளவினை கணக்கிட்டுத் தெரிந்துகொள்ள பயன்படும் ஒரு அட்டவணையாகும். இவ்வட்டவணை உருசிய நாட்டு அறிவியலாளரால் உருவாக்கப்பட்டது. இங்கு தடிமனளவினைக் காண கதிர்களின் ஆற்றலும் ஏற்பளவு குறைப்பு காரணியும் (Dose Reduction Factor-D..R.F.) தெரிந்தால் போதுமானது.
கதிர் ஏற்பளவுக் குறைப்புக் காரணி என்பது காமாக் கதிர்களை வெளியிடும் மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட புள்ளியில் கதிர்வீச்சின் அளவினை உச்சக் அனுமதிக்கப்பட்ட கதிர் ஏற்பளவால் வகுத்துக் கிடைக்கும் எண்ணாகும்
- கதிர் ஏற்பளவுக் குறைப்புக் காரணி = கதிர்வீச்சளவு/உ.அ.ஏ.
- D.R.F(k).=. Exposure/M.P.D
M.P.D ஒரு நாளுக்கு எவ்வளவு என்று கணக்கிட்டு கொள்ளவேண்டும். வெவ்வேறு ஏ.கு.கா (D.R.F) காரணிகளுக்கு பலவேறு கதிர்களின் ஆற்றலுக்கு தடிமனளவுகளைக் கொண்ட அட்டவணைகள் உள்ளன. பல ஏற்புப் பொருட்களுக்குமுள்ளன. அவைகளைப் பயன்படுத்தி நேரடியாக கணக்கிட்டுகத் தெரிந்துகொள்ள முடியும்.
தொழில்துறை காமாக் காமிராவில் கோபால்ட் 60 பயன்படுகிறது. இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் ஒரு நாளில் 6 ராட் கதிர்வீச்சுள்ளது. இப்போது உ.க.ஏ (M.P.D) வருடத்திற்கு 2.0 ராட். இதிலிருந்து ஒரு நாளுக்குக் கணக்கிட்டால் அது 0.017 ராட் என்று கிடைக்கிறது. எனவே
ஏ.கு.கா. k = 6/0.017 = 353 ஆகும். கோபால்ட் கதிர்களின் ஆற்றல் 1.25 மி.எ.வோ
அட்டவணையிலிருந்து இதற்கு நிகரான தடிமன் 105 மி.மீ. அல்லது 10.5செ.மீ.ஆகும்.
இது ஈயத்திற்காகும். பிற அட்டவணைகளும் உள்ளன.
ஏற்பளவு குறைப்புக் காரணியினையும் அரை மதிப்புத் தடிமனையும் பயன்படுத்தி எளிதாக காப்பரணின் தடிமனை கணக்கிடமுடியும்.ஒரு அ.ம.த. அளவானால் செறிவு 1/2 ஆகக் குறைகிறது.இப்போது ஏ.க.கா ,1÷1/2 = 2 ஆகும். அதாவது ஒரு அ.ம.தடிமனால் செ.கு.கா. 2 ஆகும். மேலும் இதன் தொடர்ச்சியாக,
ஆரம்பச் செறிவு. H.V.L D.R.F
1 1 2
1 2 4
1 3 8
1 4 16
1 5 32
1 6 64
1 7 128 8 256
1 9 512
1 10 1024.
அதாவது ஒரு பள்ளியில் செறிவு ஒன்று என்று கொண்டால், 10 அ.ம.த. அதே புள்ளியில் சுமார் 1000 மடங்கு
குறைவாக செறிவினைக் கொடுக்கும்.இந்நிலை சீராகத் தொடரும்.ஏ.கு.கா. 2000 என்று எடுத்துக் கொண்டால்அதனை 2*1000 என்று எழுதலாம்.இது 1+10 = 11 அ.ம.த.க்குச் சமமாகும். ஏ.கு.கா. 20,000 என்றால்,அதனை 20* 1000 என்றும் தேவைப்படும் மொத்த அ.ம.த. 4+10=14 என்றும் எழுதலாம்.
தடுப்பரணாக எந்தப் பொருளைப் பயன் படுத்துகிறோம் என்பது தெரிந்தால் அதன் அ.ம.த. அளவிலிருந்து ,மொத்த தடிமன்னைக் கணக்கிட்டுத் தெரியலாம். ஈயத்திற்கு 1.3 செ.மீ. அ.ம.த.எனவே மேலே காட்டிய எடுத்துக்காட்டிற்கு1.3*14=18.2 செ.மீ.ஆகும். பிற பொருட்களுக்கும் அவைகளின் அ.ம.த. தெரிந்து இது போல் காணலாம்.
ஆதாரம்
தொகு- Industrial radiology-S.Rumyantsev-FLPH-moscow.