குச்சிப்புடி, கிருட்டிணா மாவட்டம்

(குச்சிபுடி, கிருட்டிணா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குச்சிப்புடி (Kuchipudi) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் கிருட்டிணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது குச்செலாபுரம் அல்லது குச்சிலாபுரி என்றும் அழைக்கப்படுகிறது. [2] இது எட்டு முக்கிய இந்தியப் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான குச்சிப்புடி என்ற பெயரிடப்பட்ட நடன வடிவத்தின் தோற்றம். ஆந்திர மாநில தலைநகர் வலயத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மோவ்வா மண்டலத்தில் உள்ள கிராமங்களில் இதுவும் ஒன்றாகும். [3]

குச்சிப்புடி
ஊர்
குச்சிப்புடி is located in ஆந்திரப் பிரதேசம்
குச்சிப்புடி
குச்சிப்புடி
ஆந்திரப் பிரதேசத்தில் குச்சிப்புடியின் அமைவிடம்
குச்சிப்புடி is located in இந்தியா
குச்சிப்புடி
குச்சிப்புடி
குச்சிப்புடி (இந்தியா)
ஆள்கூறுகள்: 16°15′25″N 80°54′45″E / 16.2570°N 80.9126°E / 16.2570; 80.9126ஆள்கூறுகள்: 16°15′25″N 80°54′45″E / 16.2570°N 80.9126°E / 16.2570; 80.9126
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிருட்டிணா
பரப்பளவு[1]
 • மொத்தம்2.57 km2 (0.99 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்3,941
 • அடர்த்தி1,500/km2 (4,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்521135
தொலைப்பேசி இணைப்பு எண்+91–08671

நிலவியல்தொகு

இந்த இடம் கிருட்டிணா மாவட்டம் மற்றும் குண்டூர் மாவட்டத்தின் எல்லையாகும். இது, கொல்லூர் கிராமத்திற்கு மேற்கே உள்ளது. இது மச்சிலிப்பட்டணம் வருவாய் பிரிவின் மோவ்வா மண்டலத்தில் அமைந்துள்ளது. [4] [5]

கல்விதொகு

குச்சிப்புடியின் நடன வடிவத்திற்கு புகழ்பெற்ற பொட்டி சிறீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள எட்டு பள்ளிகளில் கிராமத்தில் உள்ள சிறீ சித்தேந்திர யோகி கலா பீடமும் ஒன்றாகும். [6]

வரலாறுதொகு

பொட்டி சிறீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகத்தின் எட்டு பள்ளிகளில் ஒன்றான சித்தேந்திர யோகி கலா பீடம், இந்த ஊரில் அமைந்துள்ளது. குச்சிப்புடி நடனம் சித்தேந்திர யோகியால் உருவானது. [7]

போக்குவரத்துதொகு

மச்சிலிபட்டணம் இந்த ஊரிலிருந்து 24 கிலோமீட்டர் (15 மைல்) தொலைவில் உள்ளது .

குறிப்புகள்தொகு

  1. 1.0 1.1 "District Census Handbook - Krishna" (PDF). பார்த்த நாள் 17 February 2016.
  2. https://www.inditales.com/kuchipudi-village-andhra-pradesh
  3. "Declaration of A.P. Capital Region" (PDF). Municipal Administration and Urban Development Department (22 September 2015).
  4. "District Level Mandal wise List of Villages in Andhra Pradesh" (PDF). National Informatics Centre. மூல முகவரியிலிருந்து 10 October 2014 அன்று பரணிடப்பட்டது.
  5. "Administrative Setup". National Informatics Centre. மூல முகவரியிலிருந்து 20 October 2014 அன்று பரணிடப்பட்டது.
  6. "Siddhendra Yogi kala Pitham". மூல முகவரியிலிருந்து 7 August 2016 அன்று பரணிடப்பட்டது.
  7. "teluguuniversity.ac.in  » Siddhendra Yogi Kala Pitham".