குஜாரி மொழி

குஜாரி மொழி, இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில், ராஜஸ்தானி மொழிகள் பிரிவைச் சேர்ந்தது. குஜார் இனத்தவரின் மொழியாக இம்மொழி இருந்து வந்தது. ஆனால் தற்காலத்தில், பல்வேறு இடங்களிலும் வாழும் குஜார்கள் அவ்வப் பகுதிகளில் புழங்கும் மொழிகளையே பேசுவதால் இம் மொழியின் பயன்பாடு குறுகி விட்டது. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாழும் குஜார்களே பெரும்பாலும் இம் மொழியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் குறைந்த அளவில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஜாரி_மொழி&oldid=185380" இருந்து மீள்விக்கப்பட்டது