குடியாத்தம்

வேலூர் மாவட்ட நகரம்

குடியாத்தம் (ஆங்கிலம்: Gudiyatham) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வட்டம் மற்றும் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் நகரமும், முதல் நிலை நகராட்சியும் ஆகும்.

குடியாத்தம்
குடியேற்றம்
—  முதல் நிலை நகராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
வட்டம் குடியாத்தம் வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி குடியாத்தம்
சட்டமன்ற உறுப்பினர்

வி. அமலு (திமுக)

மக்கள் தொகை 91,558 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

1954-ம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதல்முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. குடியாத்தம் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

பெயர்க் காரணம்

தொகு

குடியேற்றம் என்று அழைக்கப்பட்ட ஊர் சொல்வழக்கில் குடியாத்தம் என்று ஆனது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 21,363 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 91,558 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.2%மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,029 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9273 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 957 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 15,383 மற்றும் 96 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 81.58%, இசுலாமியர்கள் 16.96%, கிறித்தவர்கள் 0.98%, தமிழ்ச் சமணர்கள் 0.28%, மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[4]

தொழில்

தொகு

இந்நகரானது கைத்தறி எனும் நெசவுத் தொழிலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

குடியாத்தம் நகராட்சி

தொகு

குடியாத்தம் நகராட்சி என்பது குடியாத்தம் நகரை ஆளும் குடிமை அமைப்பாகும்

நகர்மன்ற தலைவர்களின் பட்டியல்

தொகு
  • எம்.வி. பீமராஜ செங்குந்த முதலியார்
  • எம்.வி. சுவாமிநாத செங்குந்த முதலியார் [5]
  • டி.ஏ. ஆதிமூல செங்குந்த முதலியார்: ஐஏஎஸ் தாஸ் பிரகாசத்தின் தந்தை & சுதந்திரப் போராட்ட வீரர், நூலகம் கட்ட தனது வீட்டை நன்கொடையாக அளித்தவர்.
  • பி.கே. கங்காதர செங்குந்த முதலியார்[6]
  • எம்.ஏ.வி. துரைசாமி செங்குந்த முதலியார்
  • எம்.ஏ. வேலாயுத செங்குந்த முதலியார்
  • எம்.ஏ. கோவிந்தராஜ் செங்குந்த முதலியார்: முன்னாள் தலைவர் மற்றும் ராஜேஸ்வரி ஸ்பின்னிங் மில் நிறுவனர்.
  • எம்.ஜி. அமுர்தலிங்க செங்குந்த முதலியார்
  • கே.எம். கோவிந்தராஜ செங்குந்த முதலியார்
  • ஏ.கே. துரைசாமி செங்குந்த முதலியார் முன்னாள் எம்எல்ஏ & தலைவர்
  • திலகவதி ராஜேந்திரன் முதலியார்[7]

மேலும் சில சிறப்புகள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. [https://www.censusindia.co.in/towns/gudiyatham-population-vellore-tamil-nadu-803375 குடியாத்தம் நகர மக்கள்தொகை பரம்பல்
  5. =false Civic Affairs, Volume 6, Issues 9-12
  6. தொகுதிகள் 26-27
  7. North Arcot Sengundhar Manadu Book


"https://ta.wikipedia.org/w/index.php?title=குடியாத்தம்&oldid=4155757" இலிருந்து மீள்விக்கப்பட்டது