குட்டி தேவி

இந்திய அரசியல்வாதி

குட்டி தேவி (Guddi Devi) என்பவர் குட்டி சௌத்ரி[2] என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் சட்டமன்ற உறுப்பினராக 2005-ல் ரன்னிசைத்பூர் தொகுதியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு பீகாரில் ஆட்சி அமைக்கப் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்தது.[3] 2010-ல் இவர் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 செப்டம்பர் 2015 அன்று தேவி ஐக்கிய ஜனதா தளக் கட்சியிலிருந்து பதவி விலகினார். 2015 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்.[4] 2020-ல், தேவி லோக் ஜன சக்தி கட்சியில் சேர்ந்து ரன்னிசைத்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தலில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[5] இவர் தனது பாரிய ஆதரவாளர்களுடன் 10 அக்டோபர் 2022 அன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

குட்டி தேவி
Guddi Devi
பிறப்புசீதாமர்கி
தேசியம்இந்தியா
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கைத்
துணை
இராஜேஷ் சவுத்ரி[1]
பிள்ளைகள்1

மேற்கோள்கள்

தொகு
  1. "Election Commission of India". affidavit.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-12.
  2. "Affidvavit" (PDF). Election Commission of India. 16 October 2020. Archived from the original (PDF) on 12 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "अपने घर जदयू में लौटीं पूर्व विधायक गुड्डी देवी" [Former MLA Guddi Devi returned to her home in JDU]. Hindustan (in Hindi). 5 December 2017. பார்க்கப்பட்ட நாள் 2021-07-12.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "It's all about caste politics in eight Sitamarhi seats | Patna News - Times of India". The Times of India.
  5. "लोजपा से गुड्डी देवी व जाप से लालबाबू राय सहित 20 ने किया नामांकन". Dainik Jagran.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டி_தேவி&oldid=3929008" இலிருந்து மீள்விக்கப்பட்டது