குத்தரபாஞ்சான் அருவி

குத்தரபாஞ்சான் அருவி திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள ஒரு அருவியாகும்.[1]திருநெல்வேலிக்கும் நாகர்கோவிலுக்கும் இடையே பணகுடி கிராமத்திற்கு அருகே காணப்படும் இந்த அருவி சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பணகுடி கிராமத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. இதுவரை மாசுபடாமல் உள்ள அருவி என்பதும் (செங்)குத்தாக பாய்வதும் இதன் சிறப்பு. இந்த அருவிக்குச் செல்ல கரடு முரடான மலைப்பாதை மட்டுமே. மழைக்காலத்தில் அதிக நீர்வரத்து இருக்கும். இதன் தொடர்ச்சி பணகுடியில் அனுமன் நதியாக ஓடுகிறது. இதன் நீர் மருத்துவ குணமுள்ளதென கூறப்படுகிறது. 1993ம் ஆண்டு பெய்த பெரு மழையில் இவ்வருவியில் அதிக நீர் வரத்தினால் அனுமன் நதி ஓடிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

மேற்கோள்

தொகு
  1. "பணகுடி குத்தரபாஞ்சான் அருவி சுற்றுலாத் தலமாக தேர்வு". தினமணி. 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்தரபாஞ்சான்_அருவி&oldid=3929021" இலிருந்து மீள்விக்கப்பட்டது