குருக்கத்தி கட்கபுரீசுவரர் கோயில்
குருக்கத்தி கட்கபுரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் கீவளூருக்கு அடுத்து 2 கிமீ தொலைவில் உள்ளது. ஒரு காலத்தில் இப்பகுதி குருக்கத்தி வனமாக அமைந்திருந்ததால் இவ்வூர் குருக்கத்தி என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூர் கத்தி என்ற பெயரே குருக்கத்தி என்று மாறியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.இக்கோயிலின் தல மரம் குருக்கத்தி ஆகும். [1]
இறைவன், இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் கத்தீசுவரர் என்றும் கட்கபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி ஞானாம்பிகை. [1]
குளம்
தொகுஇக்கோயிலின் குளம் கொல்லாநதி என்றழைக்கப்படுகிறது. [1]