குருதாஸ் காமத்

இந்திய அரசியல்வாதி

குருதாஸ் காமத் (Gurudas Kamat) (5 அக்டோபர் 1954 - 22 ஆகஸ்ட் 2018) இந்திய தேசிய காங்கிரசின் இந்திய அரசியல்வாதி ஆவார்.

குருதாஸ் காமத்
2010 நவம்பரில் குருதாஸ் காமத்
இந்திய நாடாளுமன்றம்
for வடமேற்கு மும்பை மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்
பதவியில்
16 மே 2009 – 16 மே 2014
இந்திய நாடாளுமன்றம்
for வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதி உறுப்பினர்
பதவியில்
16 மே 2004 – 16 மே 2009
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1954-10-05)5 அக்டோபர் 1954
அன்கோலா, பம்பாய் மாகாணம், இந்தியா தற்போது அன்கோலா, கருநாடகம், இந்தியா
இறப்பு22 ஆகத்து 2018(2018-08-22) (அகவை 63)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மகரூக் கூதாஸ் காமத்
பிள்ளைகள்மருத்துவர். சுனில் காமத்
இணையத்தளம்gurudaskamat.com

கல்வி

தொகு

தொழிலில் வழக்கறிஞரான காமத், மும்பை ராம்நிரஞ்சன் போடார் கல்லூரியிலும்,[1] மும்பை அரசு சட்டக் கல்லூரியிலும் சட்டப் பட்டம் பெற்றார்.[2]

தொழில்

தொகு

இவர் 2009 இல் மகாராட்டிராவின் வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதியிலும், 1984, 1991, 1998 , 2004 இல் மகாராஷ்டிராவின் வடமேற்கு மும்பை மக்களவைத் தொகுதியிலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[3] இவர் 2009 முதல் 2011 வரை இந்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் கூடுதல் பொறுப்பில் உள்துறை அமைச்சராக பணியாற்றினார்.[4] ஜூலை 2011இல், இவர் அமைச்சர் பதவியை விட்டு வெளியேறினார்.[5][6][7][8][9] 2013 இல், ஜூலையில் அகில இந்திய காங்கிரசு கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ராஜஸ்தான், குசராத்து, தாத்ரா மற்றும் நகர் அவேலி, தமனும் தியூவும்[10] ஆகிய பகுதிகளின் கட்சிக்குப் பொறுப்பேற்றார். பின்னர், இந்திய தேசிய காங்கிரசின் முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரசு செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.[11] 2014இல், நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோற்றார்.[12][13] 2017ஆம் ஆண்டில், காமத் இந்திய தேசிய காங்கிரசில் வகித்த அனைத்து பதவிகளையும் விட்டு வெளியேறினார்.[4][14] இவர் பதவி விலகிய போதிலும், கட்சி இவரை பொதுச் செயலாளராகவே அங்கீகரித்து வந்தது.

குடும்பம்

தொகு

1981 ஆம் ஆண்டில், காமத் மகரூக் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மருத்துவரான சுனில் என்ற ஒரு மகன் இருக்கிறார்.[14]

இறப்பு

தொகு

குருதாஸ் காமத் 22 ஆகஸ்ட் 2018 அன்று மாரடைப்பால் புதுதில்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.[15][16]

மேற்கோள்கள்

தொகு
  1. "10 Interesting Facts You Never Knew About R.A. Podar College of Commerce and Economics, Matunga". bms.co.in. Archived from the original on 4 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Maharashtra Civic Election 2017: Will Gurudas Kamat help BJP achieve a Congress-mukt Mumbai?". firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 11 May 2017.
  3. "Gurudas Kamat quits all Congress posts". IANS. Archived from the original on 18 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 11 May 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 "Senior Congress Leader Gurudas Kamat Quits All Posts". IANS. பார்க்கப்பட்ட நாள் 11 May 2017.
  5. "Sibal rejigs portfolios of Gurudas Kamat". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 11 May 2017.
  6. "Gurudas Kamat quits". ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 11 May 2017.
  7. "Union Council of Ministers". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 11 May 2017.
  8. "Union Minister Gurudas Kamat inaugurates MIDC's First Musical Fountain". daijiworld.com. Archived from the original on 3 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 May 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Gurudas Kamat resigns". moneycontrol.com. பார்க்கப்பட்ட நாள் 11 May 2017.
  10. "Gurudas Kamat thanks Congress for being appointed as general secretary". news18.com. பார்க்கப்பட்ட நாள் 6 June 2017.
  11. "Reshuffling the old guard". tehelka.com. Archived from the original on 18 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 6 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "Key Contestant: Gurudas Kamat". ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 16 January 2016.
  13. "Rude jolt for Congress stalwarts in Mumbai". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 11 May 2017.
  14. 14.0 14.1 "Congress leader Gurudas Kamat: I quit, why can't others". mid-day.com. பார்க்கப்பட்ட நாள் 11 May 2017.
  15. "Gurudas Kamat, Senior Congress Leader, Dies At 63". Headlines Today இம் மூலத்தில் இருந்து 22 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180822114951/https://headlinestoday.org/national/1816/gurudas-kamat-senior-congress-leader-dies-at-63/. பார்த்த நாள்: 22 August 2018. 
  16. https://m.timesofindia.com/city/mumbai/congress-leader-gurudas-kamat-dies/amp_articleshow/65497528.cms

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதாஸ்_காமத்&oldid=3929065" இலிருந்து மீள்விக்கப்பட்டது